உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் ரவி பதவி நீட்டிப்பு? பதில் சொல்ல முதல்வர் ஸ்டாலின் மறுப்பு

கவர்னர் ரவி பதவி நீட்டிப்பு? பதில் சொல்ல முதல்வர் ஸ்டாலின் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''கவர்னர் ரவிக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல, நான் ஜனாதிபதியும் அல்ல; பிரதமரும் அல்ல,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

வயநாடு நிலச்சரிவு குறித்து, கேரள முதல்வரிடம் பேசினேன். 'சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார். தமிழக அரசின் சார்பாக, எந்த உதவிகளும் செய்வதாக சொல்லி இருக்கிறோம்.இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், மருத்துவக் குழு அனுப்பி உள்ளோம். தமிழக அரசு சார்பில், ஐந்து கோடி ரூபாய் அனுப்பி உள்ளோம். தேவைப்பட்டால் இன்னும் உதவிகள் செய்வதாக தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.'கவர்னரின் பதவி காலம் முடியப் போகிறது. அவருக்கு மீண்டும் கவர்னர் பதவி கொடுக்க வாய்ப்புள்ளதாக சொல்கின்றனரே' என்ற கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின், ''நான் ஜனாதிபதியும் இல்லை; பிரதமரும் இல்லை,'' என பதிலளித்தார். பார்லிமென்டில் ராகுல் ஜாதி குறித்து பேசியது பற்றிய கேள்விக்கு, ''இது இப்போது கேட்க வேண்டிய கேள்வி இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal s
ஆக 01, 2024 19:35

ஆளுநரை நியமிப்பது மாநில முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம் இல்லை என்னும் போது அவரிடம் போய் இந்த அபத்தமான கேள்வியை கேட்பதே தவறு!


Palanisamy T
ஆக 01, 2024 12:08

ஒருவேளை கவர்னர் பதவி நீடிக்கப் பட்டால் அதை மத்தியிலுள்ளவர்கள் அரசியல் கண்ணோட்டத்தொடு அணுகினார்களென்பது எண்ணவேண்டியிருக்கும். தமிழகத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று எண்ணுகின்றார்கள். இது எல்லாக் காலங்களிலும் எல்லா ஊர்களிலும் நடக்கும் வினோத அரசியல் கலாச்சாரம். அரசியலென்பது எல்லாத் துறைகளிலும் ஊடுருவியுள்ளது. பொதுவாக எல்லா நாடுகளிலும் இந்த நிலைதான். கவர்னரும் அண்ணா மலையாரும் இதற்கு விதி விலக்கல்ல. தமிழகத்திற்கு தூதுவர்களாக அனுப்பப் பட்டவர்கள். கவர்னர்ப் பதவியென்பது ஒரு சம்பிரதாயப் பதவி. ஆட்சி அதிகாரங்கள் செய்யவேண்டியப் பதவியில்லை.


அப்பாவி
ஆக 01, 2024 10:21

வேட்டில இருக்கிற ஓணானை உதறுவதே புத்திசாலித்தனம்.


S. Narayanan
ஆக 01, 2024 10:08

இந்த விஷயத்தில் ஸ்டாலின் உஷார் தான். எதற்கு வாய் கொடுக்து மாட்டிக்க வேண்டும் என்று நினைப்பது


அசோகன்
ஆக 01, 2024 09:52

பாவம் ஆளுநரை கண்டால் திமுககாரனுங்களுக்கு .......3 வருஷமாச்சி... இனிமேலாவது நல்லா இருக்கலாம்னு பாத்தா விட மாட்டாங்க போல ???


ஆரூர் ரங்
ஆக 01, 2024 09:30

கேள்விகளை எழுப்பினால் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதால்தானே NITI ஆயோக் கூட்டத்திற்குப் போகவில்லை? பதிலே தெரியாதவரிடம் கேள்வி கேட்கலாமா?ஆக தவறு கேள்வி கேட்பவருடையதே.


Nallavan
ஆக 01, 2024 08:52

கவர்னர் பதவி நீட்டிப்பு சம்பந்தமான கேள்விகளை குடியரசு தலைவரிடமோ அல்லது பிரதமரிடம் கேட்க வேண்டிய கேள்விகள், இதை சம்பந்தம் இல்லாத மாநில முதல்வரிடம் கேட்க கூடாது என்ற அடிப்படை அறிவு கூட சிலரிடம் இருப்பதில்லை


ஆரூர் ரங்
ஆக 01, 2024 09:27

கருணாநிதி காலம் முதலே அவரிடம் எந்தெந்தக் கேள்விகளைக் கேட்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்வீர்கள்.. கேள்வியும் நானே. பதிலும் நானே.


வாய்மையே வெல்லும்
ஆக 01, 2024 10:46

உங்களுக்கு கருப்பு பலூன் விட்டு கோ பேக் சொல்லுவது மட்டுந்தான் தெரியும் வேறு ன்ன எதிர்பார்க்கமுடியும் மாடல் சாம்ராஜ்யத்தில் ?


Velan Iyengaar
ஆக 01, 2024 11:48

மோடியிடம் அப்படி கூட கேள்வி கேட்கமுடியாதே? தேர்தலுக்கு முன்னாடி மட்டும் எழுதிக்கொடுத்த பதிலை ஒப்புவிப்பார்... அப்படி செய்து கூட காந்தி குறித்து உளறிக்கொட்டி அவரின் அறிவு விசாலத்தை காட்டிக்கொடுத்துவிட்டார்


xyzabc
ஆக 01, 2024 08:10

துரை முருகன் கவர்னர் ஆக வாய்ப்பு எப்படி ?


ராமகிருஷ்ணன்
ஆக 01, 2024 07:45

திருடர்களை பிடிக்க போலீஸ், ராணுவம், என்று பணி புரிந்தவர்கள் வேணும்.


Anvar
ஆக 01, 2024 07:44

துண்டு சீட்டில் இருக்கறதை மட்டும் கேளுங்க ஏடா கூடமா கெட்டதா எனக்கு பதில் தெரியாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை