சனாதன தர்மத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி தீபம் ஏற்றப்படுகிறது. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட பதிவில், ''திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிந்துக்களுக்கும், சனாதன தர்மத்திற்கும் ஒரு பெரும் வெற்றி; ஹிந்துக்களின் நம்பிக்கை மற்றும் சனாதன தர்மம் தொடர்பான ஒரு முக்கியமான தீர்ப்பு'' என பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன். இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோவில் நிர்வாகத்தை மேற்கொள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும். இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.