உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிகச்சிறந்த ஹிந்துத்வா தலைவர்: ஜெ.,வுக்கு அண்ணாமலை புகழாரம்

மிகச்சிறந்த ஹிந்துத்வா தலைவர்: ஜெ.,வுக்கு அண்ணாமலை புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ''தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவராக விளங்கினார். அவருடைய இடத்தை பா.ஜ., நிரப்பி வருகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவர். ஹிந்து மதத்துக்கு அவர் நேரடியாக ஆதரவு தெரிவித்து வந்தார். ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் பா.ஜ., இருந்தாலும், ஹிந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்து வந்தது. ஹிந்து மதத்தின் வளர்ச்சிக்காக அவர் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார்.

நன்கொடை

அயோத்தி ராமர் கோவிலுக்கு, வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மதமாற்ற தடுப்புச் சட்டத்தையும் அமல்படுத்தினார். தன் சம்பளத்தை கோவில்களுக்கு நன்கொடையாக அளித்தது, கோவில் நகரமான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார். கோவில்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டார். கோவில்களுக்கு யானைகள் நன்கொடையாக அளித்தார். இதையெல்லாம் வைத்து அவருடைய ஹிந்து மதப் பற்றை தெளிவாக புரிந்து கொள்ளலாம். அவருடைய மறைவுக்குப் பின், அ.தி.மு.க., அந்தக் கொள்கையை கைவிட்டு விட்டது. அதனால், தமிழகத்தில் உள்ள ஹிந்துத்வா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ., நிரப்பி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பா.ஜ.,வை ஆதரிக்கின்றனர். இந்த லோக்சபா தேர்தலில், கட்சியின் ஓட்டு சதவீதம், இரட்டை இலக்கமாக மாறும். தமிழகத்தில் பா.ஜ., இனி மற்ற கட்சிகளின் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழக சட்டசபைக்கு, 2026ல் நடக்க உள்ள தேர்தலுக்கு, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இப்போதே அறிவிக்க கட்சித் தலைமையை வலியுறுத்த உள்ளேன். மக்கள் ஆதரவை திரட்ட மற்றொரு பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளேன்.அடுத்தாண்டில், 75 வயதாவதால், பிரதமர் மோடி ஓய்வு பெற்று விடுவார் என கூறுகின்றனர்; இது தேவையில்லாதது. இந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது உடல் தகுதி, கடின உழைப்பு, மக்களிடையே செல்வாக்கு என, எதை எடுத்துக் கொண்டாலும், தன்னை விட வயதில் இளையவர்களான காங்கிரசின் ராகுல், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை விட, மூன்று மடங்கு அதிக திறன்களை பிரதமர் மோடி கொண்டுள்ளார். உடல் திறன், மன திடம் என, எந்த வகையிலும் பிரதமர் மோடி வலுவானவராக உள்ளார்.

அவசியமில்லை

அதனால், அவர் நீண்ட காலத்துக்கு தொடர்வார். 75 வயதில் ஓய்வு என, பா.ஜ.,வின் சட்டங்களில் இல்லை. பிரதமரின் வயது மற்றும் பணிகளோடு ஒப்பிட்டால், ராகுல் வெகு தொலைவில் உள்ளார்.மோடிக்குப் பின் யார் என்பது பற்றி பேச வேண்டுமானால், 2029க்குப் பின் பார்ப்போம். அதுவரை இது குறித்து பேச வேண்டிய அவசியமில்லை. இந்த விஷயத்தில், என் மனதுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, ஐ.பி.எல்., போட்டியில் விளையாடி வருகிறார்.அடுத்தாண்டில் அவருக்கு 43 வயதாகும். ஆனாலும், அவர் தொடர்ந்து விளையாடுவார். மைதானத்தில் அவருக்கு இணையாக வேகமாக ஓடக் கூடியவர்கள் யாரும் இல்லை. அப்படி யாராவது தன்னை முந்தினால் ஓய்வு பெறுவதாக தோனி கூறியுள்ளார். அதுபோலத் தான் பிரதமர் மோடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

ThamizhMagan
மே 27, 2024 14:55

அரசியல் சாசனப்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஹிந்துத்துவ தலைவர் என்று சொன்னால் அது எப்படி புகழாரம் ஆகும்?


ThamizhMagan
மே 26, 2024 14:28

.......


SARAVANAN A
மே 24, 2024 23:15

இவற்றையெல்லாம் விட மதசார்பின்மை பற்றி ஜெயலலிதா அவர்கள் பேசியது எக்காலத்தும் அரசியலில் பொருந்தும் "நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பதை பற்றித்தான் பேசிக் கொண்டிருக் கின்றனரே தவிர உண்மையில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பது பெரும்பான்மை சமூகத்தினர். அவர்கள் தான் பாதுகாப்பு இன்றி இருக்கிறார்கள்". யாருக்கும் அஞ்சாமல் சமரசம் செய்துகொள்ளாமல் வாக்குக்காக போலித்தனம் இல்லாமல் உள்ளதை பேச அவரால் மட்டும்தான் முடியும்.


Balasubramanian
மே 24, 2024 18:40

அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையில் முன் நின்று போராடியவர் காஞ்சி ஜெயேந்திரரை சிறையில் அடைந்தவர் ஜெயலலிதா


Rengaraj
மே 24, 2024 17:13

தனக்கு பிறகு யார் என்று சொல்லாத ஒரு தலைவரை துதிபாடி, அவரை கொண்டாடிக்கொண்டு இருந்தவர்களை அந்த கட்சியின் தலைமை ஏமாற்றிவிட்டது என்றே சொல்லலாம். கட்சியின் அடுத்த தலைமையை , சரியான நபரை தனது மரணத்துக்கு முன்னர் மக்களுக்கு அடையாளம் காட்டாமல் சென்றதன் விளைவை இன்று கட்சி அனுபவித்துக்கொண்டு இருக்கிறது.


venugopal s
மே 24, 2024 16:27

இப்போது சொன்ன இந்தப் பொய்யை அண்ணாமலை அவர்கள் ஆறு‌ மாதங்களுக்கு முன்பு சொல்லி இருந்தால் அதிமுகவுடனான கூட்டணியாவது பிழைத்து இருக்கும், தமிழகத்தில் நாலு பாராளுமன்ற தொகுதிகளாவது கிடைத்து இருக்கும்!


கனோஜ் ஆங்ரே
மே 24, 2024 16:23

அண்ணாமலை... ஒரு சிங்கப் பெண் ஜெ..வையே சிறு நரி ஆக்கிட்டியே...? உன்னோட அலம்பலுக்கு எல்லையே இல்லையா...? அந்தம்மா ஒரு டெரர்... “மோடியா.. லேடியா”...ன்னு “தில்”...லா மோடி இருக்கும்போதே மேடைதோறும் முழங்கியவர், அதுமட்டுமா... உங்க பாஜக... ஆட்சிய ஒத்த பெண்மணியா இருந்து கலைச்சு... உங்க கட்சிய கதற வச்சவர்.... அவரப் போய் இந்துத்துவா தலைவர்..ங்றியே... உனக்கு தில்... இருந்தா, அந்தம்மா உயிரோட இருக்குறப்ப இதை நீ சொல்லி இருந்தா... சென்னாரெட்டிக்கும், டி.என்.சேஷனுக்கு நடந்தைவிட அதிகமா நடந்திருக்கும்... உன்னோட நல்லநேரம் அந்தம்மா உயிரோட இல்ல...? அதுனால தப்பிச்ச....


Siva Rama Krishnanan
மே 24, 2024 14:24

ஐயா காங்கிரஸ் திமுக குடும்ப ஆட்சினு விமானங்கள் செய்கிற நீங்கள் ஒரே நபர் தொடர்ந்து முதன்மை அமைச்சர் எனில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிட்டாதா ஆக யோகி அடுத்த பிரதமராக மோதி வழிவிட வேண்டும்


தமிழ்வேள்
மே 24, 2024 14:15

திராவிட கும்பல் ஆசாமிகளில் எவனும் ஹிந்து அல்ல மனத்தால், வாக்கால், செயலால் அவுரங்கசீபை விட, கோவாவில் பல வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்தியவர்களை விட கேவலமானவர்களே


Kadaparai Mani
மே 24, 2024 12:24

அம்மா அவர்கள் தமிழக்தின் தலைவர் பிரதமராக வர தகுதி உள்ளவர் தமிழக உரிமைக்கு குரல் கொடுக்கும் தலைவி உண்மையான சிறுபான்மை பாதுகாவலர் அதிமுகவில்தான் எல்லா சாதி மதத்தினர் உள்ளனர்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை