உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் படி, 2013ம் ஆண்டு மே 23ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடைடைய அரசு அமல்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டு இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கடந்தாண்டு விதிக்கப்பட்ட தடையானது, 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த அறிவிப்பு காலாவதியாகி விட்ட நிலையில் மீண்டும் தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2026ம் ஆண்டு மே 23ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mani . V
மே 27, 2025 04:52

சோமபானம் "அப்பா" குடும்பம் விற்பதால் அதற்கு தடையில்லை. என்ன எழவு சட்டமோ?


xxxx
மே 27, 2025 04:21

ஹா ஹா ....


Ramesh Sargam
மே 26, 2025 22:23

சிகரட், பீடி போன்றவைகள் கூட புகையிலை பொருட்கள்தான். அவற்றுக்கும் தடை விதிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை