உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வாக்கு சிதைந்ததா.. பா.ம.க., எதிர்காலம் என்ன?

செல்வாக்கு சிதைந்ததா.. பா.ம.க., எதிர்காலம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ம.க., தலைவர் அன்புமணி குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட கருத்துகள், கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பா.ம.க., இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி, கடந்த 2022ல் நடந்த பொதுக் குழுவில், கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் ராமதாஸ் எடுப்பதால், அன்புமணி அதிருப்தியில் இருந்தார்.கடந்த 2024 டிசம்பர் 28ல் புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில், இளைஞரணி தலைவராக மகள் வழி பேரன் முகுந்தனை நியமித்தார், ராமதாஸ். அதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்க, அப்பா- - மகன் மோதல் முற்றியது. அதன் விளைவாக, கடந்த ஏப்ரல் 10ல், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, 'நானே தலைவர்' என ராமதாஸ் அறிவித்தார்.கட்சியில், 90 சதவீத நிர்வாகிகள் அன்புமணி பக்கம் இருப்பதை அறிந்த ராமதாஸ், நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்தார். அப்போது, அன்புமணி மீது கடுமை யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். 'புதுச்சேரி பொதுக்குழுவுக்குப் பின், ராமதாஸ் செயல்பாடுகளும், பொது வெளியில் அவரது பேச்சும், பா.ம.க.,வின் செல்வாக்கை சிதைப்பதாகவே உள்ளன. பா.ம.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பலரும் நினைக்கின்றனர். இப்படியே போனால், வன்னியர் சமுதாயத்தின் ஆதரவை இழந்து, பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை வரும்' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
மே 30, 2025 16:46

இஷ்டத்துக்கு கூட்டு வெச்சு தோற்ற பிறகு கட்டிப்புடிச்சு இனிமே பிரியவே மாட்டோம்னு பேட்டி குடுப்பாங்க.


Kanns
மே 30, 2025 11:16

BAN All Vested-Divisive-Destructive-Selfish Casteist Parties All Over IndiaPMK VCK in TN


Yes your honor
மே 30, 2025 10:52

பாமக, தேமுதிக, மதிமுக இவையெல்லாம் சந்தர்ப்பவாதம் என்னும் ஒரு குறுகியவட்டத்தில் உழன்றுகொண்டிருக்கும் வெகுஜன சிந்தனையற்ற சுயநலக் கட்சிகள். இவைபோன்ற கட்சிகள் ஒருகட்டத்தில் தானாகவே அழிந்துவிடும்.


krishna moorthy
மே 30, 2025 10:05

போதும் உங்கள் குடும்பம் பொது வெளியில் பேசிப் பேசி...ஒரு நாள் மக்களும் உங்களைபோதும் என்பார்கள் போதும்


vbs manian
மே 30, 2025 09:39

பரந்த கண்ணோட்டம் கொள்கை இல்லாமல் ஒரு பிரிவினர் நலனுக்கு என்று ஆரம்பித்த கட்சி சிதைந்து விட்டது. ஒரு கட்சி எப்படி இயங்க கூடாது என்பதற்கு உதாரணம்.


RAAJ68
மே 30, 2025 08:18

எந்த ஒரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பது தான் உங்களுடைய கட்சியின் நோக்கம் அதற்காக எட்டு பெட்டியாக லஞ்சம் வாங்கினீர்கள். ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின் எல்லோரிடமும் வெற்றி பெட்டியாக பல கோடிகளை வாங்கி குவித்து வைத்துள்ளீர்கள் திண்டிவனம் தைலாபுரம் எல்லாவற்றையும் வளைத்து போட்டு உள்ளீர்கள் கணக்கில் அடங்கா சொத்துக்களை நேர்மையற்ற முறையில் அவகரித்துள்ளீர்கள். மக்கள் டிவிக்கு எப்படி முதலீடு வந்தது அந்த இடம் யாருக்கு சொந்தம் பல இடங்களில் பல ஏக்கரில் நிலங்களை வைத்திருப்பது எப்படி. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சி விடனும் கூட்டணி என்று மாறி மாறி மக்களை முட்டாளாக்கி ஒரு கொள்கையற்ற கட்சியாகவே இதுவரை வந்துள்ளது உங்கள் கட்சி தமிழகத்திற்கு தேவையில்லை சீக்கிரம் உங்கள் கட்சிக்கு அழிவு காலம்


VENKATASUBRAMANIAN
மே 30, 2025 07:40

பெரியவருக்கு வயதாகிவிட்டது எதை பொது வெளியில் பேச வேண்டும் என்று தெரியவில்லை. அன்புமணியும் சரிக்கு சரி பேசி மதிப்பை குறைத்துக் கொள்கிறார். குடும்ப பிரச்சினைகள் குடும்ப உறுப்பினர்களை வைத்து தீர்த்துக்கொள்ள வேண்டும். பாவம் தொண்டர்கள்


Barakat Ali
மே 30, 2025 08:26

சரியாகச் சொன்னீர்கள் ..... கட்சியே குடும்பச் சொத்தாக இருந்தால் இப்படித்தான் நடக்கும் ....


சுந்தரம் விஸ்வநாதன்
மே 30, 2025 07:36

இந்தக் கம்பெனிக்கு இன்றைய முக்கியத்தேவை எள்ளும் தண்ணீரும் .அவ்வளவே


Nallavan
மே 30, 2025 07:23

வெட்டிய மரங்களின் கண்ணீர், கடவுள் கர்மா இருக்கிறான் குமாரு


mindum vasantham
மே 30, 2025 07:12

அன்புமணி வழியில் எழுச்சி பெரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை