உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்விரோதம் காரணமாக உருண்ட தலைகள் 475

முன்விரோதம் காரணமாக உருண்ட தலைகள் 475

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மூன்று ஆண்டுகளில், முன்விரோதம் காரணமாக, 475 கொலைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கான காரணங்களில், முதல் மூன்று இடங்களில், குடும்ப தகராறு, வாய் தகராறு மற்றும் முன்விரோதம் ஆகியவை உள்ளன. அந்த வகையில், முன்விரோதம் காரணமாக மூன்று ஆண்டுகளில், 475 கொலைகள் நடந்துள்ளதாக, போலீஸ் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது, போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுப்பது இல்லை. விசாரணை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, முன்விரோத கொலைகள் அதிகரித்து வருகின்றன. பிரச்னைகளை தீர்த்து வைப்பதில், போலீஸ் அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை. சட்ட ரீதியாக நடவடிக்கையும் எடுப்பது இல்லை. குற்றம் செய்தவர் தண்டிக்கப்படும்போது, எதிர் தரப்பினர் மீது கோபம் கொள்வது இயல்பு. இந்த பகை வளரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, போலீசாருக்கு உள்ளது. காவல் நிலையங்களுக்கு வருவோரின் பிரச்னைகளை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுத்தாலே, 50 சதவீத முன்விரோத தகராறுகள் குறைந்து விடும். முன்விரோதம் காரணமாக, பழிக்கு பழி வாங்க துடிப்போரை ரகசியமாக கண்காணித்து, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இத்தகையை கொலைகள் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mani . V
ஆக 09, 2025 04:22

எழவு மாடல் அரசின் சாதனையப்பு.


Padmasridharan
ஆக 09, 2025 04:21

ரெண்டு பேர் காவல் நிலையத்துக்கு போனா, இவங்க ரெண்டு பேருக்கிடையே சண்டைய வளரவிட்டுதானே பஞ்சாயத்து பண்ற மாதிரி பணத்த ரெண்டு பக்கமும் அதிகார பிச்சையெடுக்கறாங்க.. பல காவலர்களும் ரகசியமா கண்காணிக்கறது கடற்கரை போன்ற பொது இடங்களில் எவன் குடிக்க வருவான், காதலியோட வருவான் அவங்க கிட்ட மொபைல புடுங்கி பணமாக அதிகார பிச்சையெடுக்க எப்பவுமே முன்னெச்சரியாதான் இருக்காங்க மேலிடத்துல இருந்து உத்தரவு நல்லாத்தான் போடறாங்க ஆனா காவலர்கள்ல பலரும் மனசாட்சிக்கு விரோதமா மக்களை ஏமாத்தி அவங்களோட சொந்த குடும்ப வம்சத்துக்கு சாபத்ததான் சேக்கறாங்க.


raman
ஆக 09, 2025 04:08

போலீஸ் அதிகாரிகளே போலீஸ் விசாரணை தாமதம் என்கிறார்கள். போலீசாரர்களை வேலை செய்ய விடாமல் ,அரசியல் வியாதிகள், தடுத்து விடுகிறார்கள். மேலதிகாரிகள் தலையீட்டால் விசாரணை நின்று விடுகிறது. அல்லது திருப்புவனம் போல் அடிக்கப் போய் விடுகிறார்கள். போலீஸ்காரர்கள் இடையூறு இன்றி வேலை செய்ய விடுங்கள்