உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கன மழை

ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கன மழை

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில். தலா 7 செ.மீ., மழை பெய்துள்ளது.அடுத்தபடியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனுார், சேலம் மாவட்டம் சந்தியூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.தமிழகம் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்றும் நாளையும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்.இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலுார், கடலுார், புதுக்கோட்டை, பெரம்பலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், வரும் 13 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து, 2 டிகிரி செல்ஷியஸ் வரை குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை