உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை

நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணை ஆகிய இடங்களில், தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது. கோவை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், 3 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.https://x.com/dinamalarweb/status/1948176497334005799அடுத்த 24 மணி நேரத்தில், இந்த சுழற்சி காரணமாக, வடக்கு வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் சில இடங்களில், 27 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில், ஜூலை 28 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ