தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனையொட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய 'சக்தி' தீவிர புயல், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை வடமேற்கு மற்றும அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளில், குறிப்பாக தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அக்.,11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று (அக்.,6): திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் நாளை (அக்.,7) ; கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்அக்.,08; கோவை மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும்அக்.,09; கோவை மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்அக்.,10 மற்றும் 11ம் தேதி; தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.