உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் டிச.,25, 26ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் டிச.,25, 26ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இதையடுத்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (டிச.,23) வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும். இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.தமிழக வட மாவட்டங்களின் கடலோரம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
டிச 23, 2024 17:51

மதுரையில் சாலை விபத்துகள் அதிகம் -மதுரை திருமங்கலம் ரயில்வே பாலம் வேலைகள் நடைபெறுகிறது, மாற்று பாதை சரியான விதிகளின் மற்றும் உரிய கட்டமைப்புகள் பின்பற்றாமல் -நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப் பணம் வாங்கிக்கொண்டு மாற்றுப்பாதை வெறும் மண்பாதைபோட்டு மேடுபள்ளங்கள் உள்ளன, கனரக வாகனங்கள் செல்லும் இந்தப்பாதையில் பொதுமக்களின் பயம் அதிகமுள்ளது, இப்பொழுது மழை காலமென்பதால் ஆங்காங்கே மழைதண்ணீர்தேங்கி பாதுகாப்பற்ற சூழலுள்ளது - இதனால் ஏற்படும் விபத்துகள் மற்றும் மரணங்களுக்கு நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்தான் பெறுப்பேற்கவேண்டும் .


முக்கிய வீடியோ