வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Dinamalar kalai vanakkam
மழை பெய்யட்டும்... திருநெல்வேலியில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது
சென்னை: 'தமிழகத்தில் இன்று (மே 16) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை (மே 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மே 19ம் தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Dinamalar kalai vanakkam
மழை பெய்யட்டும்... திருநெல்வேலியில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது