உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை (நவ.,12) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 16 வரை லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை (நவ.,12) கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி