உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை: ''தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 215 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று (மே 25) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு: அவலாஞ்சி- 215சின்னக்கல்லார் - 137சின்கோனா - 95எமரால்டு - 94பந்தலுார் - 93வென்ட்வொர்த் 90தேவாலா - 87அப்பர் பவானி 74சிறுவாணி அடிவாரம் 73சோலையாறு 73கூடலுார் பஜார்- 71அப்பர் கூடலுார் - 69கீழ் கோத்தகிரி 65சேர்முள்ளி - 61பார்வுட் - 59வுட் பிரையார் - 59வால்பாறை - 51மேடவாக்கம் - 48.3மடிப்பாக்கம் - 48.3மாக்கினாம்பட்டி- 42.4

ஆற்றில் வெள்ளம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால் நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கோவை மாவட்டம், சித்திரைச்சாவடி அணைக்கட்டை கடந்து வரும் நொய்யல் வெள்ளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அன்பே சிவம்
மே 26, 2025 07:24

1).இறைவன் மற்றும் இயற்கை கருணையால் நதிகள் மழை மூலம் தங்களை தானே சுத்தம் செய்து கொள்கின்றன. 2).நொய்யல் ஆறு குப்பைகள் மற்றும் திருப்பூர் சாய பட்டறை கழிவுகளால் நிரம்பி உள்ளது. இறைவன் அருளால் சுத்தம் ஆகட்டும்


சின்னசேலம் சிங்காரம்
மே 25, 2025 13:53

கிடைக்கும் மழையை சேகரிக்க குளம் குட்டைகளை தயாராக வைத்திருக்கிறார்களா


Ramesh Sargam
மே 25, 2025 12:41

போர்க்கால நடவடிக்கை எல்லாம் எடுத்திட்டீங்களா முதல்வரே ...? நீங்கள் இப்பொழுது டெல்லியில் இருப்பதால் இப்பவே மழை சேதம் நிவாரண நிதியையும் கேட்டு, கொடுத்தா அதையும் வாங்கிட்டு வந்துடுங்க.


சமீபத்திய செய்தி