உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்று லஞ்சம் வாங்கி சிக்கியவர்கள் பட்டியல் இதோ!

நேற்று லஞ்சம் வாங்கி சிக்கியவர்கள் பட்டியல் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லியில் மாரிமுத்து என்பவரின் வீட்டுமனையை சப் டிவிஷன் செய்து பட்டா மாற்றம் செய்து தர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கனகராஜை 34,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

சர்வேயர் கைது

சிவகாசியை சேர்ந்தவர் மாரிமுத்து, இவருக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா மல்லி வருவாய் கிராமத்தில் வீட்டு மனை உள்ளது. இதனை சப் டிவிஷன் செய்து பட்டா மாற்றம் செய்யக் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் மே மாதம் விண்ணப்பித்திருந்தார்.இதற்கு தாலுகா அலுவலக சர்வேயர் கனகராஜ் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு, பின்னர் அதனை ரூ.7ஆயிரமாக குறைத்து முடிவில் ரூ.5 ஆயிரம் வேண்டுமென கூறியுள்ளார். விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் மாரிமுத்து புகார் செய்தார்.நேற்று முன்தினம் லஞ்சம் கொடுக்க மாரிமுத்து வரும் போது நாளை வா என கனகராஜ் திருப்பி அனுப்பியுள்ளார். நேற்று காலை 11:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சர்வேயர் அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கும் போது கனகராஜை, ஏ.டி.எஸ். பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், யாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மின் வாரிய அதிகாரி சிக்கினார்

சென்னை, மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர், தன்னுடைய இடத்தில் வணிக பயன்பாட்டிற்காக புதிதாக ஆறு கடைகள் கட்டியுள்ளார். இக்கடைகளுக்கு வணிக ரீதியிலான மின் இணைப்பு கோரி, மணப்பாக்கம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மின் இணைப்பு வழங்க வணிக ஆய்வாளர் அண்ணாமலை என்பவர், ஒவ்வொரு மின் இணைப்பிற்கும் தலா, 2,500 ரூபாய் வீதம், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இது தொடர்பாக தினேஷ்குமார், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன்படி, நேற்று லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டு, ரசாயன பவுடர் தடவிய, 15,000 ரூபாயை தினேஷ்குமாரிடம் கொடுத்து அலுவலகத்திற்குள் அனுப்பினர்.அந்த பணத்தை லஞ்சமாக பெற்ற அண்ணாமலை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Balakrishnan karuppannan
ஜூலை 04, 2025 21:16

இப்படி கையும் களவுமாக பிடிபட்ட களவாணிகளுக்கு பணி மாறுதல் தவிர வேறு என்ன தண்டனை கிடைத்து விடப்போகிறது


Kuppan
ஜூலை 03, 2025 06:31

லஞ்ச ஒழிப்புத் துறை மிகவும் மெதுவாக இயங்குகிறது. ஏனெனில் இவர்களின் சட்ட ஓட்டையில் பலரும் தப்பித்து விடுகின்றனர். இந்நேரம் 80%பேர் உள்ளே தான் இருக்க வேண்டும்.


Ramar P P
ஜூலை 03, 2025 00:40

அரசு இவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை போலும்.இதற்கு இவர்கள் தெருத்தெருவாக பிச்சை எடுக்க போகலாம்.இல்லையேல் கோயில் வாசலில் பிச்சை எடுக்கலாம்.


Ramar P P
ஜூலை 03, 2025 00:34

இலஞ்ச ஒழிப்புத்துறை தானாக முன்வந்து ஆய்வில் இறங்கி பிடிபடும் அதிகாரிகளை உடனே டிஸ்மிஸ் செய்தால் அரசு அலுவலகங்களில் ஒரு சதவீதம் பேரே வேலை செய்வர்.


M BALAKRISHNAN MOUNASAMY
ஜூலை 02, 2025 21:15

கோவை கிழக்கு மண்டலத்தில் வரன் முறை படுத்துவதற்காக முன்று ஆண்டுகளாக அலைகிறேன் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது


RAVINDRAN.G
ஜூலை 02, 2025 12:18

லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். மாட்டினவன் உள்ள போறான். மாட்டாத நிறைய பேர் வெளிய இருக்கான். துக்ளக் ஆசிரியர் சோ சொன்னமாதிரி இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று போர்டு வைத்தால் போதும். சம்பளம் தரவேண்டியதில்லை. அரசுக்கும் பணம் கணிசமான மிச்சம் ஆகும். மொத்த லஞ்சத்துக்கும் பில் கொடுக்கவேண்டும். அதில் 75% அரசுக்கு கொடுக்கவேண்டும். மீதி 25% லஞ்சத்தில் அரசு ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம். லஞ்சத்தை சட்டமாகிவிடலாம். What is illegal today is legal tomorrow என்று அவர் சொன்னபடி மாற்றிவிட்டால் போதும். அரசு ஊழியரும் பயம் இல்லாமல் கமிஷனுக்காக உண்மையா உழைப்பார்கள்.


Ramesh Sargam
ஜூலை 02, 2025 11:35

அவர்கள் வாங்கியது லஞ்சம் அல்ல. இனாம், அதாவது பரிசு. அவ்வளவுதான் என்று திமுக முட்டுக்கட்டை பேசும்.


Sivakumar
ஜூலை 02, 2025 10:58

Like POCSO and Corruption issues, Dinamalar should publicise the drug menace also on daily/weekly basis for public awareness. Journalism standards at its best, keep it up!!


ramesh
ஜூலை 02, 2025 10:38

நாம் அரசு அலுவலகத்தில் நமது தேவைக்காக விண்ணப்பித்தால் நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அலுவலர்கள் ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயம் செய்து வசூலித்து கொண்டுதான் இருக்கிறார்கள் . நாம் இந்த வேலை செய்ய தான் அரசால் சம்பளம் வழங்க படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்


ramesh
ஜூலை 02, 2025 10:31

அரபு நாட்டில் இருப்பது போன்ற சட்டம் வேண்டும் .லஞ்சம் வாங்கினால் பொதுமக்கள் முன்னிலையில் வாங்கிய கை வெட்டப்பட வேண்டும் . இல்லை என்றால் ஒருகாலமும் லஞ்சம் இந்தியாவில் ஒழிக்க முடியாது .காஷ்மீர் முதல் குமரிமுதல் லஞ்சம் என்பது அங்கீகரிக்க பட்ட ஒன்றாக அரசு அலுவலர்கள் மத்தியில் உள்ளது .


சமீபத்திய செய்தி