மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
55 minutes ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 27
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
6 hour(s) ago | 12
நீலகிரி : குன்னூர் ஜெகதளா கிராமத்தில் படுகர் இன மக்களின், பாரம்பரிய ஹெத்தையம்மன்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது..நீலகிரி மாவட்டத்தில் 14 கிராமங்களில், படுகஇன மக்கள் ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.இதில், ஜெகதளா ஆறூர் மக்களால் கொண்டாப்படும்,ஹெத்தை திருவிழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.48 நாட்கள் விரதம் மேற்கொண்டஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.இன்று கன்னி ஹெத்தையம்மன் கோவில்,அமைந்துள்ள ஜெகதளாவில், பண்டிகைகோலாகலமாககொண்டாடப்பட்டது.கோவிலில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சேலை'அம்மனுக்கு சார்த்தப்பட்டது. மடியரை என அழைக்கப்படும் கோவிலில் இருந்து ஹெத்தையம்மன்ஊர்வலம் துவங்கியது. ஹெத்தை தடியுடன்,நூற்றுகணக்கான ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக ஜெகதளா வந்தனர். இதில், குடைகள் புடைசூழ, ஆடல் பாடல்களுடன் படுக மக்கள் வந்தனர். ஹெத்தை அம்மனை பூசாரிதனது தலையில் சுமந்தவாறு, சுமந்து வந்தது பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.வரும் வழியில் வேட்டிகளை விரித்து, அதன் மீது நடக்க வைத்த மக்கள் தரையில் விழுந்து வழிபட்டனர்.பிறகு ஜெகதளா கோவிலை ஊர்வலம் அடைந்தது. அங்கு அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து ஆறூர் குடைகளுடன் பக்தர்கள் பஜனை பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடினர்.நிகழ்ச்சியில் பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் சென்ற படுக மக்கள் வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
55 minutes ago | 2
3 hour(s) ago | 27
6 hour(s) ago | 12