உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில், தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு, அ.தி.மு.க., காங்., நா.த.க., கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையே, போராட்டத்தை கைவிட்டு துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். தனியார் நிறுவன பணியில் பணி பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் இருப்பதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: * சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.* போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்.* அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம். * சட்டத்திற்கு உட்பட்டு அனைவரையும் அப்புறப்படுத்துங்கள்.* அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

தமிழ்வேள்
ஆக 13, 2025 20:44

சென்னையின் மொத்த குப்பை கழிவுகளளயும் திமுக பிரபலங்கள், திராவிட நீதியரசர்கள் வீட்டு வாசலில் கொட்டினால் தீர்ந்தது வேலை...


பேசும் தமிழன்
ஆக 13, 2025 19:22

இப்போது தான் R S பாரதி பேசிய பேச்சின் அர்த்தம் புரிகிறது..... தமிழ்நாடு விளங்கிடும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 13, 2025 17:04

1996 என்று ஞாபகம். மேற்படி அதிகார மையம் மேயராக இருந்த போது சிருங்கார சென்னையில் குப்பை காண்டிராக்ட்க்கு குன்றியத்திலும் ஒன்றித்திலும் சரியான ஆள் கிடைக்காமல் சிங்கப்பூரில் இருந்து ஒருவரை இறக்குமதி செய்தார்கள். பின்னாட்களில் அவர் குடும்பத்தில் ஐக்கியமாகி பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியானது வரலாறு. இப்போது அதே சென்னைக்கு ஆந்திராவில் இருந்து ஒருவரை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இவரும் எப்படி குடும்பத்துக்குள் ஐக்கியமாகப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


D.Ambujavalli
ஆக 13, 2025 16:37

பணி நிரந்தரம் செய்யப்பட்டால், பணி பாதுகாப்பு, seniority படி உயர்வு, விடுப்பு, ஓய்வுஊதியம் போன்ற நிரந்தர சலுகைகள் கிடைக்கும் தனியார் நினைத்தால் ஒரு மாதம் வேலையில் வைத்துக்கொண்டு நிறுத்தினாலும் கேட்பாரில்லை இவர்கள் ஒன்றும் சொல்லாததைக் கேட்கவில்லையே துறை அமைச்சர் எட்டிப்பார்க்கவில்லை, முதல்வர் அப்படியே சிகிச்சைக்கு லண்டன்பக்கம் தப்பிச்சென்றுவிடுவார் அதற்குள் இதை முடிக்க யாரையோ விட்டு கோர்ட் உத்தரவு வாங்கி போராட்டத்தை முடிக்கத் திட்டம்


D.Ambujavalli
ஆக 13, 2025 16:37

பணி நிரந்தரம் செய்யப்பட்டால், பணி பாதுகாப்பு, seniority படி உயர்வு, விடுப்பு, ஓய்வுஊதியம் போன்ற நிரந்தர சலுகைகள் கிடைக்கும் தனியார் நினைத்தால் ஒரு மாதம் வேலையில் வைத்துக்கொண்டு நிறுத்தினாலும் கேட்பாரில்லை இவர்கள் ஒன்றும் சொல்லாததைக் கேட்கவில்லையே துறை அமைச்சர் எட்டிப்பார்க்கவில்லை, முதல்வர் அப்படியே சிகிச்சைக்கு லண்டன்பக்கம் தப்பிச்சென்றுவிடுவார் அதற்குள் இதை முடிக்க யாரையோ விட்டு கோர்ட் உத்தரவு வாங்கி போராட்டத்தை முடிக்கத் திட்டம்


lana
ஆக 13, 2025 16:20

பஞ்சாப் டெல்லி எல்லையில் ஒரு வருடம் விவசாயிகள் போராட்டம் செய்ய முடியும். இங்கு 10 நாட்களில் முடியாது. இது தாண்டா தீய முக. திராவிட மாடலிங் ன்னா என்ன ன்னு கேட்பவர்களுக்கு இது தான் பதில். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது


தமிழ் மைந்தன்
ஆக 13, 2025 15:08

அப்படியே டாஸ்மாக் ஊழல் அரசு துறைகளின் அளவில்லாத ஊழல் பாலியல் கொடுமை உபிக்களின் அட்ரசிட்டி கஞ்சா விற்பனை கள்ள சாராயம் விற்பனை போன்ற சமூக விரோத செயல்களை எப்போது நிறுத்த அல்லது குறைக்க திட்டம் ஏதும் உள்ளதா?


ManiMurugan Murugan
ஆக 13, 2025 14:51

நீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெற்று அவர்கள் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு இட வேண்டும்


Balasubramanyan
ஆக 13, 2025 14:16

Good judgement. Will he says where the helpless workers can express their gievenes. Why there is private companies. Is that company owned by ruling party members . Pity the judges who could not think why they are doing the strike. Who is that lady. In he name politicians are playing. Judge Si pl think about their demands.


தமிழன்
ஆக 13, 2025 13:56

இதை கூட நீதி மன்றம் சொல்லி தான் செய்யும் நிலையில் அரசு இருக்கிறது.. காவல் துறையும் கைகாட்டிக்கொண்டு இருக்கிறது.. என்று சொல்றீங்களா? nirvaaga திறமை இல்லாத திமுக அரசு என்று குற்றம் சொல்வது செய்திகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.. உங்கள் திருப்திக்காக சொல்லி வைப்போம். திமுக இல்லாத தமிழகம் படைப்போம்