உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை டோல்கேட் களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை டோல்கேட் களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை-துாத்துக்குடி நான்குவழிச்சாலையை முறையாக பராமரிக்காததால் எலியார்பத்தி, புதுார் பாண்டியாபுரம் டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w9bnu5bm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை - துாத்துக்குடி இடையே நான்குவழிச்சாலை அமைக்க 2006ல் ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தப் பணி வழங்கப்பட்டது. 2011 முதல் சாலை பயன்பாட்டிற்கு வந்தது. ஒப்பந்ததாரர் நிறுவனம் சாலையின் இருபுறம் மற்றும் நடுவில் மரங்கள் நடவேண்டும். ஆனால் அப்பணி பகுதி அளவு மட்டுமே நடந்துள்ளது. சாலையை நிறுவனம் முறையாக பராமரிக்கத் தவறியது. மதுரை அருகே எலியார்பத்தி, துாத்துக்குடி அருகே புதுார் பாண்டியாபுரத்தில் டோல்கேட்கள் அமைத்து வாகனங்களிடம் அந்நிறுவனம் கட்டணம் வசூலித்தது. சாலையை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மீறியதால் அந்நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் 2023 ல் ரத்து செய்தது. நிறுவனம் மீது சரியான நேரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியது. இதனால் சாலையில் வாகனங்களில் பயணிப்போர் சிரமத்தை எதிர்கொண்டு, நிதி இழப்பிற்கு ஆளாகியுள்ளனர். தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) டோல்கேட் கட்டணம் வசூலிக்கிறது. சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியது அரசின் கடமை. அதை நிறைவேற்றவில்லை. இருபுறமும் மரங்கள் நடும்வரை மற்றும் இதர பராமரிப்பு பணியை முடிக்கும்வரை டோல்கேட் கட்டணத்தில் 30 சதவீதம்வரை வசூலிக்க வேண்டும். நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.என்.எச்.ஏ.ஐ.,தரப்பு: எங்களுக்கும், தனியார் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்த பிரச்னைக்கு சமரச தீர்ப்பாயம் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்னை எங்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையிலானது. மூன்றாம் நபரான மனுதாரர் தலையிட முடியாது. தள்ளுபடி செய்ய வேண்டும்.மனுதாரர் தரப்பு: தனியார் நிறுவனம் சாலையை சரியாக பராமரிக்கவில்லை. இதனால் சாலையை பயன்படுத்துவோர் சிரமங்களை சந்திக்கின்றனர் என என்.எச்.ஏ.ஐ.,உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததை என்.எச்.ஏ.ஐ.,தரப்பு ஒப்புக் கொள்கிறது. கட்டணம் வசூல் என்பது இருதரப்பிற்கு இடையிலான பிரச்னை அல்ல. மூன்றாம் தரப்பாக மக்கள் உள்ளனர். மக்கள்தான் கட்டணம் செலுத்துகின்றனர். அதில் மனுதாரரும் அடக்கம். கட்டணம் செலுத்தும் மக்களுக்கு தரமான சாலை வசதி செய்ய வேண்டியது என்.எச்.ஏ.ஐ.,யின் பொறுப்பு. அதை நிறைவேற்றத் தவறியதால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். பராமரிப்பு பணி முடியும்வரை சட்டப்படி கட்டணம் வசூலிக்கக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: சாலையை முறையாக பராமரிக்காமல், இருபுறமும் மரங்கள் நடாத சூழலில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது. மதுரை-துாத்துக்குடி நான்குவழிச்சாலையிலுள்ள டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இதை நடைமுறைப்படுத்தாவிடில் இந்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜூன் 18 ல் என்.எச்.ஏ.ஐ.,தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 14:45

எந்த டால்கேட் ஒப்பந்ததாரர்களையும் சட்டப்படி அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. இது பாலு காலத்தில் கொண்டு வரப்பட்ட நீண்டகால ஒப்பந்த விதி. அவர்கள் முறைப்படி சாலைகளை புதுப்பித்து வைக்கத் தவறினாலும் மத்திய அரசால் உடனடியாக கழுத்தைப் பிடித்து துரத்த முடிவதில்லை. கோர்ட் படியேற வைக்க வேண்டியுள்ளது. இதுவரை அமைச்சர் நிதின் கட்கரி மீது எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. நெடுஞ்சாலை கட்டணம் வாங்காமல் உலகத்தர சாலைகளை அமைக்க முடியாது. அதனை அச்சாலைகளைப் பயன்படுத்தும் வண்டி உரிமையாளர்களிடம் மட்டுமே வசூலிக்க முடியும்.


venugopal s
ஜூன் 04, 2025 10:59

மத்திய அரசில் எல்லாமே குப்பை, வாய்ச் சவடால் மட்டும் தான் உள்ளது. இந்த லட்சணத்தில் மாநில அரசைக் குறை கூறுவதற்கு மட்டும் குறைச்சல் இல்லை!


அப்பாவி
ஜூன் 04, 2025 09:31

ஒன்றிய அரசு இதை சூதாட்ட தடை கேஸ் மாதிரி பீஸ் பீஸாக்கிட்டும். காசு வசூல் நா அல்வா சாப்புடற மாதிரியாச்சே.. இன்னும் 28 தலை முறைக்கு டோல் கட்டி அழுவணும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 04, 2025 09:06

டோல்நிறுவனம் பற்றி விசாரித்தால் அது ஒரு கட்சிக்காரனின் பினாமியாக இருக்க வாய்ப்புள்ளது


Nallavan
ஜூன் 04, 2025 08:17

மாநில அரசு பல நல திட்டங்களை செய்யும் பொது ஒன்றிய அரசு டோல்கேட் பிரீ செய்யலாமே


GMM
ஜூன் 04, 2025 07:38

தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் என்பது பராமரிப்பின் ஒரு பகுதி. மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலையிலுள்ள டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றால், பராமரிப்பு முடியும் வரை சாலையை பொது மக்கள் வாகனங்கள் பயன்படுத்த கூடாது. முன்பு போல் கட்டணம் இல்லாத மாநில சாலை வழியே செல்ல வேண்டும்.


மூர்க்கன்
ஜூன் 04, 2025 07:48

என்ன பங்கு?? இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு?


Yoga Ravi Chennai
ஜூன் 04, 2025 10:59

நண்பரே ஏறக்குறைய அனைத்து கட்டண சாலைகளும் சரியாக இல்லை. முதன் முறையாக கோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. நீங்கள் டோல் ஒப்பந்ததாரரா? அவர்களுக்கு சார்பாக பேசுகிறீர்கள். இது மக்களின் பிரச்சினை. அனைவராலும் வழக்கு போட முடியாது. ஒருவர் பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 04, 2025 07:30

இது எல்லா டோல்களிலும் உள்ளது. மரங்கள் விடப்படவில்லை சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ளது. இதையும் கவனிக்க வேண்டும்


Mahendran Puru
ஜூன் 04, 2025 07:03

டோல் கட்டணம் ஒரு பகல் கொள்ளை. தரமான சாலை அமைப்பு மற்றும் பராமரிப்பிற்கு வசூலிக்கப்படுவது. அரசு தவறிய பட்சத்தில் கட்டண ரத்து சரியே.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூன் 04, 2025 06:09

டோல் கட்டணம் மத்திய அரசின் கெட்ட பெயருக்கு முக்கிய காரணம்.


புதிய வீடியோ