உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டரை, 'சஸ்பெண்ட்' செய்ய, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சக்தி, 38; டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு எதிராக, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சிவகுமார், 42, கடந்த 2023 செப்., 8ல், சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார்.தன் உறவினருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதோடு, 3.5 லட்சம் ரூபாய் கொடுத்து, கார் வாங்கி வாடகைக்கு விட்டு, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை தருவதாக கூறி, சக்தி, அவரது தந்தை குணசேகரன் ஆகியோர் ஏமாற்றியதாக, புகாரில் தெரிவித்திருந்தார்.அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சக்தி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் மீதான வழக்கை விரைவாக விசாரித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, கடந்த ஆண்டு மார்ச் 1ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து, கடந்த 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகனுக்கு உத்தரவிடப்பட்டது.நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நாளுக்கு முன்தினம், நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அவசர அவசரமாக மின்னணு முறையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதை பார்க்கும்போது, வழக்கில் முழுமையாக விசாரணை நடந்ததா என்று சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி ஏன் செயல்படவில்லை என்பதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, உரிய கால அவகாசம் கோரியும் மனு தாக்கல் செய்யவில்லை. விசாரணை அதிகாரியின் இந்த செயல் அலட்சிய போக்கானது.இந்த வழக்கு மட்டுமல்ல; பெரும்பாலான வழக்குகளில், போலீசார் உரிய நேரத்தில் விசாரணை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில்லை. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, எந்த கால அவகாசமும் நிர்ணயம் செய்யப்படாததால், அதை சாதகமாக எடுத்துக் கொள்கின்றனர்.பெரும்பாலான வழக்குகளில், உள்ளே, வெளியில் இருந்து வரும் அறிவுறுத்தல்களின்படி தேர்வு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கின்றனர். எனவே, ஏழை மக்கள் விரைவான தீர்வு பெற முடியாமல் தவிக்கின்றனர். இதுவே, தமிழகத்தின் தற்போதைய நிலைமை. எனவே, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மீது, டி.ஜி.பி., துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக, கள்ளக்குறிச்சி எஸ்.பி., சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கையை, டி.ஜி.பி., மற்றும் மாவட்ட எஸ்.பி., ஜூலை 7க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sugumar s
ஜூன் 10, 2025 11:50

if court tells will govt act immediately? no way. Naanga dravidam


Padmasridharan
ஜூன் 10, 2025 11:12

இந்தமாதிரி, நீதிமன்றம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இவர்களை தனியாக கவனித்தால் இவர்கள் பணத்துக்காக பஞ்சாயத்து பண்ணி அதிகப்படுத்தியுள்ள, வெளியில் வராத புதிய_நிறைய குற்றங்கள் தடுக்கப்பட்டு தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படும். இவர்களே செய்யும் பாலியல் தொல்லைகள், பணம்/ பொருள் புடிங்கி, ஒருமையில் அசிங்கமாக பேசி வண்டியில், இளைஞர்களை அறைக்கு கூட்டி செல்கின்றனர்.


அப்பாவி
ஜூன் 10, 2025 09:55

அமெரிக்கா மாதிரி போலீஸ் அதிகாரிகளும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டால் இதுபோன்ற அலட்சிய அதிகாரிகள களையெடுக்கலாம். போலீஸ்துறையை அமைச்சர் கையிலிருந்து பிடுங்கி டம்மியாக்கலாம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 10, 2025 09:49

இப்படி காவல்துறை, நீதிமன்றங்கள் மற்றும் மற்ற அரசு துறைகள் எதற்குமே தங்கள் வேலையை முடிப்பதற்கு எந்தவித காலக்கெடுவும் இல்லை. இதுவும் லஞ்ச ஊழல்கள் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம். மேலும், மக்கள்தான் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், தன் கடமையை ஒழுங்காக செய்ய தவறிய அந்த காவலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கண்துடைப்புக்காக பணியிடைநீக்கம் செய்திருக்கிறார். பணம் அதிகாரம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியதை எளிதாக சாதித்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டிய சாதாரண நீதி கூட கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள். புரிஞ்சவன் புத்திசாலி.


Kanns
ஜூன் 10, 2025 09:44

Sack Entire Police& Govt Superiors for Never Punishing PowerMisusing Looting Useless LowerStaff. Waste of Public Money


சிவம்
ஜூன் 10, 2025 09:04

உண்மையில் காவல் துறை அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் பாவப்பட்ட மனிதர்கள். மத்தளத்திற்கு இரு பக்கம் இடி என்பார்கள். குற்றவாளி மேல் சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியாத படி அரசியல் அழுத்தம் ஒரு பக்கம். அதுவும் வாய் மொழி உத்தரவுகள். மறு பக்கம் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற நீதி மன்ற அவமதிப்பு. காவல் துறை அதிகாரிகளின் கஷ்டங்களை புரிந்து கொண்ட ஒரு அரசு வர வேண்டும்.


சண்முகம்
ஜூன் 10, 2025 08:10

இன்ஸ்பெக்டரை, எஸ் பி சஸ்பெண்ட் செய்யலைன்னா நீதிபதி என்ன செய்வாரு?


Varadarajan Nagarajan
ஜூன் 10, 2025 07:49

நீதிமன்றத்தின் இந்த உத்தரவும் அமல்படுத்தப்படாத முந்தய உத்தரவுபோல் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அணுகவேண்டிவரும் மறுபடியும் வழக்கு விசாரணை முடியும்வரை காத்திருக்க வேண்டும். இப்படித்தான் பல அரசு அதிகாரிகளில் செயல்பாடுகள் உள்ளது. விதிமுறைகளுக்கு முரணானது என தெரிந்தும் வேண்டுமென்றே ஆணை பிறப்பித்து பாதிக்கப்பட்டவரை நீதிமன்றம் செல்ல நிர்பந்திப்பதுபோல நடந்துகொள்வதும் நடக்கின்றது


GMM
ஜூன் 10, 2025 07:44

மாநில போலீஸ் ஆளும் கட்சி கீழ் செயல்படும் போது தன் வேலையை காக்க அரசியல் வாதிகள் நிழல் உத்தரவிற்கு ஏற்ப நடக்க வேண்டும்.? திராவிட மண்ணில் எழுத படாத சட்டம். மன்றம் காலத்திற்குள் செயல் படாத தலைமை செயலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை நடவடிக்கை எடுக்க விரும்புகிறது. இதில் தீர்வு காண முடியாது.


VENKATASUBRAMANIAN
ஜூன் 10, 2025 07:34

டிஸ்மிஸ் செய்ய வேண்டும்


புதிய வீடியோ