விஜய்க்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ்?
சென்னை: த,வெ.க., தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பு, வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சட்டசபை தேர்தலில், த.வெ.க., வெற்றிக்குப்பின், அதன் தலைவர் விஜய்க்கு, முதல்வருக்கு வழங்கப்படும் உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த கான்வாய் பாதுகாப்பு, வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து, நீலாங்கரை வீட்டுக்கு புறப்படும் முன்பு, அவரது கான்வாய் வாகனங்கள் அங்கிருந்து சென்றுவிட்டன. இதனால், பாதுகாப்பின்றி, தனியாக அவர் தவது காரில் கிளம்பி சென்றார். இது த.வெ.க., மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.விஜய் கவர்னர் மாளிகைக்கு சென்றபோது, முதல்வருக்கான சிறப்பு கான்வாய் பாதுகாப்பில் விஜய் சென்றார். முதல்வராக பதவி ஏற்காமல் விஜய்க்கு எப்படி கான்வாய் பாதுகாப்பு அளிக்கலாம், என கவர்கள் கேள்வி கேட்டதாகவும், அதனால்தான், பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின், மீண்டும் கான்வாய் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.