உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துவ வன்னியருக்கு எம்.பி.சி., எதிர்த்த ஹிந்து அமைப்பினர் கைது

கிறிஸ்துவ வன்னியருக்கு எம்.பி.சி., எதிர்த்த ஹிந்து அமைப்பினர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல் : ஹிந்து வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட எம்.பி.சி., உரிமையை கிறிஸ்துவ வன்னியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திண்டுக்கல்லில் நடந்த கிறிஸ்துவ வன்னியர் இட ஒதுக்கீடு மாநில மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி, ஹிந்து மகா சபா நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல்லில் நேற்று நடந்த மாநாடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது என்றும், இது மதம் மாற்றும் ஒரு முயற்சி எனக்கூறி, ஹிந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி, அகில இந்திய ஹிந்து மகா சபா அமைப்பினர், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹிந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி தலைவர் மோகனை, திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்க வலியுறுத்தி, அக்கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல்- - பழநி சாலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

joe
மே 27, 2025 13:59

If a person is ready to sacrifice his benefits enjoyed for God then only he can convert to other religion or otherwise he can continue in the same religion.If he gives first place for God and believe God will give everything he need not worry about loosing the benefits or otherwise it is better for him to continue on the same religion


veeramani
மே 26, 2025 09:19

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மிக சரியான தீர்ப்பு கொடுத்துள்ளது. எவர் ஒருவர் மதம் மாறினார்களோ அவர்களது பிறந்த ஸ்டேட்டஸ் உடனடியாக ரத்து ஆகிறது எதையெல்லாம் தெரிந்து சிலர் இந்துவிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்னர் பிறந்த ஸ்டேட்டசு கேட்பது நியாயமில்லை.


N Sasikumar Yadhav
மே 25, 2025 19:52

வன்னியருக்காக கட்சி நடத்தும் டாகுடர் அமாபுமணி ராமதாசு போராட்டம் செய்திருக்க வேண்டும்


Kulandai kannan
மே 25, 2025 19:13

உலகிலேயே அதிக படுகொலை களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமானவர்கள் இந்த மிஷநரிகள்தான்.


Barakat Ali
மே 25, 2025 18:34

ஹிந்து மதத்தில் சாதிக்கொடுமை இருக்குன்னு மதம் மாறினவனா இடவொதுக்கீடு கேட்டு போராடுறான் ????


Iyer
மே 25, 2025 17:34

பணத்தாசை காட்டியும் - மிரட்டியும் இந்துக்களை - மற்ற மதத்தில் மாற்றி வருகிறார்கள், இந்தியாவில் ஹிந்துக்களுக்கு மட்டும் ஓட்டுரிமை - அரசாங்க வேலை என சட்ட திருத்தும் கொண்டுவருவது அவசியம்


V.Mohan
மே 25, 2025 14:25

திருட்டுத்தனமாக, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும்,டாக்டர். அம்பேத்கர் அவர்கள் அமைத்த சட்ட விதிகளையும் மதிக்காமல் 1975ல் இந்திரா பெரோஸ்கான் , இந்திய பார்லிமெண்டை முடக்கி வைத்த 18 மாதங்களில், சத்தமில்லாமல் இந்தியா ""செக்யூலர்"" நாடு எனவும் மதசார்பு அற்றது எனவும் மாற்றினார். முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு மதம் வளர்க்க எந்த வித தடையும் இல்லை. ஆனால் ஹிந்துக்கள் மதம் பற


James Mani
மே 25, 2025 12:59

நன்றி வாழ்க இந்தியா


VSMani
மே 25, 2025 11:28

இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதம் மாறினால் MBC யிலிருந்து BC ஆக மாறிவிடுகிறது. பின்னர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதம் மாறினால் BC யிலிருந்து MBC யாக மாறமுடியுமா? ஒருவர் இன்று இந்து மதத்தில் இருப்பார் நாளை கிறிஸ்தவராகவோ இஸ்லாமியராகவோ மாறலாம். பின்னர் மாறிய மதம் பிடிக்கவில்லை என்று திரும்பவும் இந்து மதத்திற்கு வந்தால் பழைய SC அல்லது MBC யை பெற்றுக்கொள்ள முடியுமா? MGR இந்து நாடார் கிறிஸ்தவ நாடார் எல்லாருமே BC என்று ஆக்கினார். அதேபோல் இந்து வன்னியர் கிறிஸ்தவ வன்னியர் MBC என்று ஆக்கினால் என்ன? அதேபோல் இந்து SC கிறிஸ்தவ SC மக்களை பொதுவான SC என்று ஆக்கினால் என்ன? மதம் ஒரு விசயமே இல்லை.


vadivelu
மே 25, 2025 14:01

மதம் மாறியவர்கள் பிறவி SC , MBC ஆகா இருந்தாலும் அவர்களை BC ல் மட்டுமே சேர்க்கவேண்டும். இந்துக்களுக்கான சலுகைகளை பறிக்க மதம் மாறியவர்களை கொடுக்க கூடாது. இட ஒதுக்கீடு இந்துக்களின் சாதிகளுக்காகத்தான் .


பெரிய ராசு
மே 25, 2025 14:14

மதம் ஒரு விசயமே இல்லை ..அப்புறம் எதுக்கு துணி போடுறே அம்மணமாகவே திரியவேண்டியது தானே ...உன்னை மாதிரி கோணங்கி


Kanns
மே 25, 2025 11:25

Ban All Religious Conversions Retrospectively Atleast Wef 1947 And Retrospectively Withdraw All Reservations/Freebies/ Concessions esp CasteBased Given to them As Castes Doesnt Exists in Other Religions And Conversions Fraudulently Done


புதிய வீடியோ