உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனி, சமயபுரத்தில் இடைநிறுத்த தரிசன முறையை கைவிட வேண்டும்: ஹிந்து தமிழர் கட்சி

பழனி, சமயபுரத்தில் இடைநிறுத்த தரிசன முறையை கைவிட வேண்டும்: ஹிந்து தமிழர் கட்சி

சென்னை : 'பழனி, சமயபுரம் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், இடைநிறுத்த தரிசன முறையை கைவிட வேண்டும்' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

பக்தர்கள் அதிகமாக வரும் திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகிய கோவில்களில், தினமும் பிற்பகல் 3:00 முதல் 4:00 மணி வரை இடைநிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்பட்டு, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு மணி நேரத்தில், 500 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத வழிபாட்டு சட்டப்படி, சுதந்திரத்திற்கு முன் கோவில்களில் என்ன வழிபாடு முறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். அவற்றை மாற்றம் செய்ய, எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை.கோவில் பழக்கவழக்கங்களை மாற்றம் செய்யக்கூடாது என, கோவில் நுழைவுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் வழிபாடு பூஜை தரிசனம் செய்யும் நேரங்களை மாற்றி அமைக்க, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.ஆனால், தமிழக அரசும், அதிகாரிகளும், கோவில்களை வருமானம் ஈட்டும் தொழில் நிறுவனமாக கருதுகின்றனர். அதிக கட்டணம் பெற்று, இடைநிறுத்த தரிசன வசதியை ஏற்படுத்துவது, பக்தியோடு தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம், ஆன்மிக தீண்டாமையை உருவாக்கும்.எனவே, இடைநிறுத்த தரிசனத்தை கைவிட வேண்டும். அனைத்து கோவில்களிலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Bhaskaran
ஜூன் 17, 2025 10:55

காசு கிடைத்தால் திரவிடியாஸ் எது வேண்டுமானாலும் செய்வார்கள்


Sivasankaran Kannan
ஜூன் 17, 2025 08:55

முதலில் திராவிடியா பெருச்சாளிகளை கோவில்களை விட்டு அடித்து விரட்ட வேண்டும்.. ஓர் UPI facility கூட இல்லாமல் cash மூலம் இவர்கள் எல்லா பணத்தையும் கொள்ளை அடிக்கிறார்கள்..


Sundar R
ஜூன் 17, 2025 08:49

தமிழகத்தில் கோயில்களில் வழிபாட்டு முறை என்பது பாரம்பரியமாக ஒழுக்கத்துடன் கடைபிடிக்கப்படுகிறது. வழிபாட்டு முறை என்பது ஊருக்கு ஊர், கோயிலுக்குக் கோயில் மாறுபடக் கூடியது. வழிபாட்டு முறையை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தமிழிலும், சமஸ்கிருதத்திலும், இவை இரண்டையும் கலந்தும் தமிழகத்தில் ஏராளமான கோயில்களில் வழிபாடு நடக்கிறது. கோவில்பட்டியில் ஒரு பெருமாள் கோயிலில் முழுக்க முழுக்க தெலுங்கு சம்பிரதாயத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன. அங்கு வைகுண்ட ஏகாதசியன்று பூஜைகள் வித்தியாசமாகவும், அதிக சிரத்தையோடும் செய்கிறார்கள். பலிபீடத்தில் நிறைய அன்னம் வைத்து, பலிபீட பூஜையை அதிக நேரம் செய்கிறார்கள். தெலுங்கில் மந்திரங்கள் சொல்லி, கீர்த்தனைகள் பாடி அந்த அர்ச்சகர்கள் பூஜைகள் செய்வது நம் மனதிற்கு மிகவும் பிடித்த வகையில் இருக்கும். பொள்ளாச்சியில் கன்னடர்கள் நடத்தும் ஒரு கோயிலில் கன்னடத்தில் பூஜை செய்கிறார்கள். ஸ்ரீ ராமநவமியன்று ஆஸ்திக போஜனத்திற்குப் பிறகு, "உருளு தண்டம்" அதாவது அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். தமிழகத்தில் ஒரு சிவன் கோயிலில், ஒரு மாத சிவராத்திரி அன்று, தமிழர்கள் இரண்டு அருமையான சிவபக்தி ஹிந்தி பாடல்களை "சங்கரா, ஷிவ் சங்கரா, ஷிவ் சம்போ மஹாதேவா" என்று ஒரு பாடலையும், "தயா கரோ பஹ்வான் ஷங்கரு, தயா கரோ பஹ்வான்" என்று இரண்டாவது பாடலையும் பாடினார்கள். அந்த பாடல்கள் மிகவும் இனிமையாக இருந்தது. எனவே, அரசியல் பின்புலம் கொண்ட அறநிலையத்துறை ஆட்களுக்கும், வேறு அரசியல் கட்சிகளுக்கும் எந்த ஒரு கோயிலிலும், அங்கு நடக்கும் அன்றாட பூஜைகள் எந்த மொழியில் இருந்தாலும், வழிபாட்டு முறையில் தலையிட, யாருக்கும் உரிமையும், அருகதையும் கிடையாது. இறைவனுக்கு எல்லா மொழிகளும் தெரியும். இறைவனுக்கு நம்முடைய இனிஷியலும் தெரியும். அதனால் தான் நாம் நம் பெயரில் அர்ச்சனை செய்யும் போது நம்முடைய இனிஷியலை அர்ச்சகரிடம் சொல்வதில்லை. கோயில், ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டிய இடம். அரசியல்வாதிகள் கோயில் நடைமுறைகளை மாற்ற கோயில்கள் SECULAR கிடையாது.கோயில்கள் அனைத்தும் PURELY COMMUNAL என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே.


m.arunachalam
ஜூன் 17, 2025 08:20

சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவிலிலும் வசூலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது .


Priyan Vadanad
ஜூன் 17, 2025 07:34

ராமரை முன்னிறுத்தி வடநாட்டை கபளீகரம் செய்தாகிவிட்டது. நமது தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவரின் சொந்த தமிழ்நாட்டை என்றும் ஆள்வார். அவரை முன்னிறுத்தி பின்னால் நின்று எவரும் தமிழ் மக்களை வஞ்சிக்க விடமாட்டார்.


raja
ஜூன் 17, 2025 08:37

எப்பவுமே நீ இப்படித்தானா இல்லை அம்மாவாசை பவுர்ணமிக்கு மட்டும் தானா... தமிழ் கடவுள் முருகன் என்றால் தமிழன் என்று சொல்லி கொள்ளும் தமிழ் கிருத்துவர்கள் முஸ்லிம்கள் முருகனை கும்பிடுவார்களா. முருகன் இந்துக்களில் கடவுள் என்று கூமுட்டைகளுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்து விட்டது...


sridhar
ஜூன் 17, 2025 12:47

முருகன் தமிழ்நாடு தாண்டினால் கடவுள் இல்லையா . ஸர்வவ்யாபி ஆன கடவுளுக்கு ஒரு மாநிலம் மட்டும் தான் சொந்தம் என்பது தற்குறிகளின் வாதம் .


புதிய வீடியோ