உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கபளீகரம் செய்யப்படும் ஹிந்து கோவில் நிலங்கள்

கபளீகரம் செய்யப்படும் ஹிந்து கோவில் நிலங்கள்

அறநிலையத்துறையின் கீழ், கோவில் நிர்வாகம் வந்த பின், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் காணாமல் போய் விட்டன. கோவில் நிலம், குளங்கள் உள்ளிட்டவை அரசுக்கு தாரைவாக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஏராளமான சொத்துக்கள் இருந்தும் 17 ஆயிரம் கோவில்களில் ஒரு கால வழிபாட்டுக்கு கூட வழியில்லை. இந்த அவலத்தை, வெட்கமே இல்லாமல், அறநிலையத்துறையே, கோர்ட்டில் அளித்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது. ஆயிரக்கணக்கான கோவில்கள் சீரழியும் நிலையில், கோவில் நிதியில் கல்லுாரி கட்ட, தமிழக அரசு மசோதா நிறைவேற்றுவது, எந்த அளவுக்கு மோசடியானது? இதுபோல, கரூர், தாந்தோணிமலை கோவில் நிலம் பிளாட் போடப்பட்டுள்ளது. கோவில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்வது தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், கோவில் நிலம் குத்தகை, வாடகை பாக்கி குறித்து, கோவில் வாசல்களில் பதாகைகள் வைக்கப்பட்டன. இப்போது, இவை மூடி மறைக்கப்படுவதில் சதி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. - காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N S
நவ 10, 2025 11:48

"கோடிகள் குவித்தாலும் கோமகனை மறவேன்" என்று அன்று ஒரு பக்தர் பாடினார். அறநிலையத்துறை அமைச்சர் கவனத்திற்கு இதுவரை இந்த கோவில் நிலங்கள் விஷயம் செல்லவில்லை. அவர், திராவிட மாடல் முதல்வர் விருப்பப்படி "வேல் கொண்டு சூரனை வதம் செய்வதிலும், சென்னை மாநகராட்சியில் கொட்டப்பட்ட கோடிகளை மீட்கவும், மிக தீவிரமாக இருக்கிறார்.


V RAMASWAMY
நவ 10, 2025 07:27

வாய்ப்பேச்சால் எதுவும் செய்யமுடியாது, பல இந்து அமைப்புகளையும் ஆன்மீக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து , ஆர் எஸ் எஸ் உதவியுடன் போராட்டத்தில் இறங்குங்கள்.


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2025 00:37

தூங்கிட்டே இருந்தா பொருளை களவாண்டுகிட்டு தான் போவான் வெள்ளையன் மதத்தினர்


புதிய வீடியோ