உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து ஒற்றுமை மாநாடு: ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடு

ஹிந்து ஒற்றுமை மாநாடு: ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடு

சென்னை : ''ஆர்.எஸ்.எஸ்., என்பது அன்புக்கான இயக்கம். இதை தமிழகத்தில் சிலர் புரிந்து கொள்ளவில்லை,'' என, அதன் தென் இந்திய மக்கள் தொடர்பு செயலர் பிரகாஷ் தெரிவித்தார்.ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத பொதுக்குழுக் கூட்டம், மார்ச் 21 முதல் 23 வரை பெங்களூரில் நடந்தது. அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை, சேத்துப்பட்டில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது.அதில், தென் இந்திய மக்கள் தொடர்பு செயலர் பிரகாஷ் கூறியதாவது:தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும், 'ஷாகா' எனப்படும் தினசரி கூடுதல், வாரக் கூடுதல் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. நடப்பாண்டில், 1,368 கிளைகள் துவங்கப்பட்டு மொத்தம், 4000 கிளைகள் உள்ளன.வங்க தேசத்தில் வசிக்கும் ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஐ.நா., சபை வரை செல்வது மற்றும் உலக மக்கள் அமைதியும் வளமும் பெற, ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது என, பெங்களூரு பொதுக்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அன்பிற்கான இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., அதை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 100 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதை, தமிழகத்தில் சிலர் புரிந்து கொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாறாவது ஆண்டையொட்டி, நடப்பாண்டு விஜயதசமி முதல் அடுத்த ஆண்டு விஜயதசமி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.அதாவது, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை ஒருங்கிணைப்பது, மண்டலம், கிராமங்களில் வீடு வீடாக சென்று, 100ம் ஆண்டு விழா குறித்து விளக்குவது, ஹிந்து ஒற்றுமை மாநாடுகள் நடத்துவது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.ஆர்.எஸ்.எஸ்., தென் இந்திய ஊடகச் செயலர் ஸ்ரீராம், வட தமிழக ஊடகச் செயலர் சந்திரசேகரன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

R.P.Anand
மார் 27, 2025 16:02

ஒருத்தன் உண்டியல குளுக்குவான் ஒருத்தன் உண்டியல் திருடு வான். ஒருத்தன் உண்டியல்ல எடுத்து வேற ஒருதனுக்கும்ம் குடுப்பான் இது எல்லாத்துக்கும் ஆப்பு வைக்கனும் அன்னத்த


Sampath Kumar
மார் 27, 2025 11:11

அய்யா கோவாலு கோவாலு நீ தா குரூப்பு போல அதான் கொதிக்கிற இங்கே எப்படி உள்ளனரோ வேலை வந்தது ku உன்னால் ஹில் சொல்ல ய்யுமடா நீங்கதான்டா நம்பர் ஒன்னு குள்ளநரி கும்பல் உண்மையை சொன்ன பொதுக்கிடு விருதாகும் வரட்டும் உன்னக்கு இருக்கும் ஐ ரோசம் மானம் எல்லாம் எங்களுக்கும் உண்டு வா மோதி பார்க்கலாம் .


அப்பாவி
மார் 27, 2025 10:44

போய் உ.பி, குஜராத்ல நடத்திக்க வேண்டியதுதானே?


Prasanna Krishnan R
மார் 27, 2025 14:02

நீங்கள் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அல்லது குறைந்தபட்சம் ஒரு குலத்திற்குப் பிறந்திருந்தால், உங்கள் அசல் பெயரில் கருத்து தெரிவிக்கவும். கிறிஸ்தவ மிஷனரி சொற்பொழிவுகள் வாடிகன் நகரில் மட்டும் செய்யப்பட வேண்டும் என்று ஏன் சொல்ல முடியாது? அதேபோல் அரபு நாடுகளிலோ அல்லது பாகிஸ்தானிலோ மசூதியில் தொழுகை செய்ய வேண்டும். இந்த இந்து வாழ்க்கை முறை. அது என் பாரதத்தின் பாரம்பரிய அம்சங்கள்.


தஞ்சை மன்னர்
மார் 27, 2025 10:42

நாங்க நம்பிட்டோம்


sankaranarayanan
மார் 27, 2025 08:44

இது சிறுபான்மை சங்கிகள் மாநாடுன்னு சொல்லுங்க என்று யாருமே கூறமுடியாது அப்படியானால் அந்த சிறுபாண்மையினருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் தருகிறார்களா? இல்லையே பெருபாண்மை இனத்தவரை இங்கே அரசியல் கட்சிகள் மதிப்பதே கிடையாது சிறுபாண்மை இனத்தவரின் வாக்குகளுக்காக பெருபான்மை இனத்தவர்களை கட்டோடு ஒதுக்குகிறார்கள் வீழ்ந்து மடிகிறார்கள்


மூர்க்கன்
மார் 27, 2025 11:05

புலம்பல்


Sampath Kumar
மார் 27, 2025 08:15

ஹிந்து அணியில் இரண்டு இருக்கு அண்ணா ஓன்று பிராமின் குரூப்பு மற்றது ப்ரமின் இல்லாதது நீகையாருக்க நடத்துறீங்க என்று சொல்லி விட்டு நடத்துங்கன்னா கூட்டம் சேரவே வசதியா இருக்கும் இல்லையா ?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 27, 2025 09:12

இது எல்லா இந்துக்களுக்கானது அதனால் உங்க குள்ளநரி புத்தியை இங்கே காட்ட வேண்டாம்....!!!


ஆரூர் ரங்
மார் 27, 2025 11:21

முஸ்லிம் லீக் தமிழ் முஸ்லிம்களுக்கு. உருது முஸ்லிம்களுக்கு தேசீய லீக். கரெக்டா?


கிஜன்
மார் 27, 2025 07:15

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்....என்றும் உரியர் பிறர்க்கு.


Oviya Vijay
மார் 27, 2025 06:55

ஏற்கனவே ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் எல்லோரும் ஒற்றுமையா தான்யா இருக்காங்க... சங்கிகள் மட்டும் தான் அடிச்சுகிட்டு சாவுறானுங்க. பெரும்பான்மை ஹிந்துக்கள் எந்த சச்சரவும் இல்லாம நிம்மதியா தான் இருக்கோம். அதனால இது சிறுபான்மை சங்கிகள் மாநாடுன்னு சொல்லுங்க. அப்படி சொன்னா தான் கரெக்டா இருக்கும்...


இந்தியன்
மார் 27, 2025 08:08

நாடு நல்லாயிருப்பது பெரும்பான்மையினரில் S.V சேகர், Oviya Vijay போன்ற சிலபேருக்கு பிடிக்கவில்லை...அவ்வப்போது தங்களது விஷம கருத்துக்களை கக்கி கொண்டே இருப்பார்கள்...கையில் காசு அதிகமாக இருந்தாலே, காலாவதியான முற்போக்கு சிந்தனைகளும் கூடவே வந்துவிடும் போல... ஜெய் பாரத்...


vivek
மார் 27, 2025 08:43

சங்கி சங்கி என்று புலம்பும் பத்து பைசா பெறாத ஒரு கொத்தடிமை... சரியான காமெடி பீசு


Mettai* Tamil
மார் 27, 2025 09:55

ஹிந்து ஒற்றுமை என்று சொன்னவுடன் பதறுவது ஏன்? தமிழ் நாட்டில் பெரும்பான்மை ஹிந்துக்கள் ஊழல், பிரிவினைவாத கும்பலின் பிடியில் உள்ளனர். அதனாலதான் ஆப்கனிஸ்தான் நாட்டிலிருந்து இங்கு கொள்ளை அடிக்க வந்த சிக்கந்தர் ஷா மன்னனுக்கு, தமிழ் கடவுள் முருகன் மலையான திருப்பரங்குன்றத்து மலையில் சமாதி வைத்தது மட்டும் இல்லாமல், மலையின் புனிதத்தை கெடுக்கும் விதமாக நடந்தது எந்த ஒற்றுமை ... ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் எல்லோரும் ஒற்றுமையா தான்யா இருக்காங்க. ன்னு சொல்ற நீங்க ஏன் கொள்ளை அடிக்க வந்த சிக்கந்தர் ஷா மன்னன் சமாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க ....


மூர்க்கன்
மார் 27, 2025 11:06

சரியான அடி சங்கிளுக்கு ?? ஆனால் திருந்த மாட்டார்கள் .


R.RAMACHANDRAN
மார் 27, 2025 06:34

சாதி மற்றும் மத அடிப்படையில் அன்பு செலுத்துவது அன்பு செலுத்துவது ஆகாது.மாறாக இந்த அன்பு நலிந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் மீது அதிகாரம் செலுத்தவே ஆகும்.


venugopal s
மார் 27, 2025 06:09

அன்புக்கான இயக்கம் என்றால் இயக்க உறுப்பினர்கள் கையில் கம்பு எதற்கு?


Thiyagarajan S
மார் 27, 2025 06:44

அமைதி மார்க்கம் உங்களை நோக்கி சுடுகின்ற துப்பாக்கி, வீசுகின்ற வெடிகுண்டு போன்ற ஆயுதங்களை தடுப்பதற்காகத்தான் தம்பி....


karupanasamy
மார் 27, 2025 06:55

உன்னைப்போன்ற கழகக் கயவர்களிடமிருந்து தன்னையும் மக்களையும் பாதுகாக்க


Sundad மணி
மார் 27, 2025 07:25

வெறும் அன்பு காண்பித்தாலும், மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். பிரைன் வாஷ் செய்யப்பட்ட தமிழர்கள் அவர்களையும் தாக்குவார்கள். திராவிடர்கள் நிச்சயம் வெறுப்பினால் எதுவும் செய்ய மாட்டார்கள். அவர்கள் பாதுகாப்பிற்கு தேவைதான்,


vivek
மார் 27, 2025 07:33

அட 200 ரூபாய்... கம்பு திராவிட விஷ காளான் களை ஒழிப்பதற்கு


Mettai* Tamil
மார் 27, 2025 09:38

60 வருஷ ஊழல், பிரிவினைவாத ஆலமரத்தில் ஊஞ்சலாடும் சிலதுகளின் சேட்டைகளை சமாளிக்கத்தான் ...