உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழகம் பெற்றுள்ளது என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். சற்று முன்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நமது தமிழக அரசு பெற்றுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zmep2mk9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* இந்த சட்டமன்ற பேரவையில் நாம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார்.* பின்னர் அந்த மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம்.* 2வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.* இதனை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கவர்னர் மசோதாவை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், அந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.* இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. * தி.மு.க.,வின் உயிர் கொள்கையான மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை நிலைநாட்ட தமிழகம் போராடியது. தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

Matt P
ஏப் 10, 2025 00:07

இந்த மாதிரி தீர்ப்பு எல்லாம் வரலாற்று சிறப்பு மிக்கது தான். வரலாற்று சிறப்பு மிக்க வூழ்ல் என்று இருப்பது போல.


Matt P
ஏப் 09, 2025 22:23

நீதிமன்றம் எப்போதும் இவங்களுக்கு சாதகமாக தான் இருக்கும். அதனால் மாநில சுயாட்சியும் கிடைச்சிடும்னு ஒரு நப்பாசை ...நம்பிக்கை தான்.


Durai Kuppusami
ஏப் 09, 2025 07:25

நான் ஒரு இந்தியனாக என் எண்ண ஓட்டத்தினை பதிவு செய்தேன்.கருத்துக்களில் மீறல் இருந்தால் மன்னிக்கவும்.தினமலர் அவர்களுக்கு நன்றி....


எவர்கிங்
ஏப் 09, 2025 07:12

யார் அப்பன் வீட்டு காசு அமைச்சரவையில் மூன்றாவதாக.... பரம்பரை ஆட்சி என்ற தோழமை நொட்டுதல் எதுவும் கிடையாதா குருமா


Durai Kuppusami
ஏப் 09, 2025 07:06

ஒன்று புரியவில்லை ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 மசோதாக்கள் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.பின் எதற்கு ஆளுனர் ஜனாதிபதி எல்லோரையும் உச்ச நீதிமன்றமே பதவி நீக்கம் செய்து செய்து தானே எல்லா அதிகாரங்களையும் பெற்று இந்தியாவை அதிகார வளையத்திற்குள் கொண்டு வரலாமே.. பாராளுமன்றமே தேவையில்லை கலைத்து விடலாமா உச்ச நீதிமன்றம் மட்டும் போதுமே செய்வார்களா.....ஒன்றும் புரியவில்லை வாழ்க உச்ச நீதிமன்றம்...... ..


சிட்டுக்குருவி
ஏப் 09, 2025 04:17

இந்த தீர்ப்பில் பிழை உள்ளது.அதனால் மறுபரிசீலனைக்கு உகந்தது.நாளையே நீங்கள் நீட் தேர்வு தமிழ்நாட்டில் இல்லை என்று அறிவிப்பீர்கள்.உடனே ஆளுநர் அங்கிகரிப்பாரா? இனிமேல் தமிழ்நாடு தனிநாடு என்பீர்கள்.உடனே ஆளுநர் அங்கீகரிப்பரா? ஆளுநர் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உற்பட்டுதான் தன் கடமையை செய்யமுடியும்.நாட்டின் சட்டங்களுக்கு புறம்பான சட்டமன்ற தீர்மானங்களை நிருத்தி வைப்பதுதான் சரியானதே.ஆளுநர் எல்லா சட்டமன்ற தீர்மானங்களையும் அங்கீகரிக்க வேண்டுமென்றால்,ஆளுநர் எதற்க்கு?


Nandakumar Naidu.
ஏப் 08, 2025 21:24

மிகவும் கேவலமான தீர்ப்பு.


Pandi Muni
ஏப் 08, 2025 20:43

அதுக்குதான் டாஸ்மாக் ஊழல் கேசு வருது திருட்டு திராவிடன் சந்தோசத்தில் மண்ணை அள்ளிப்போட


Bhakt
ஏப் 08, 2025 20:36

இவர்கள் வீட்டில் தீ பிடித்தால் ...


அழுகும் மாடல்
ஏப் 08, 2025 20:35

டாஸ்மாக், உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கி மனுவை திரும்பப் பெற்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்ததை செல்லவே இல்லை சட்ட சபையில்...


சமீபத்திய செய்தி