உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்

வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்

சென்னை: ''கன்னடம் மொழி தமிழில் இருந்து உருவாகவில்லை என்று வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபித்துவிட்டால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். கமல் மன்னிப்பு கேட்க கூடாது'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: கமல் வரலாற்று பூர்வமான ஆதாரத்தை சொல்லி உள்ளார். தமிழ் உடன் சமஸ்கிருதம் கலந்து பேசி பேசி, அதில் இருந்து பிரிந்து பிறந்த மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம். கன்னடம் மொழி தமிழில் இருந்து உருவாகவில்லை என்று வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபித்துவிட்டால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். கமல்ஹாசன் கூறியது வரலாறு. அதை வைத்துக்கொண்டு படத்தை திரையிட அனுமதிக்க மாட்டேன் என்பது சிறுபிள்ளை விளையாட்டு. நாங்கள் நதி நீரை கேட்டாலே உங்களுக்கு பிரச்னை என்றால் என்ன செய்வது? மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன செய்து விட போகிறீர்கள்? கமல் மன்னிப்பு கேட்க கூடாது. நாங்கள் எல்லோரும் கமலுக்கு துணை நிற்போம். கமல் கன்னடர்களையும், மக்களையும் அவமதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழில் இருந்து வந்தது தான், தமிழின் குழந்தை தான் கன்னடம் என்று சொல்கிறார். கே.ஜி.எப்-01, கே.ஜி.எப்.2, காந்தாரா ஆகிய படங்களுக்கு நாங்கள் ஏதாவது இடையூறு செய்தோமா? இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

S.V.Srinivasan
ஜூன் 04, 2025 15:09

இவனுக அடிக்கிற கூத்து அங்குள்ள அப்பாவி தமிழர்களுக்கு பிரச்சனை என்பதை உணரவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறானுவளே.


மாயவரம் சேகர்
ஜூன் 04, 2025 13:58

அந்த கன்னட பட நாயகர்கள் தமிழ் மொழி பற்றிய கன்னட மொழி பற்றிய எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அந்த பட கதாநாயகர்கள் எந்த அரசியல் கட்சியும் சாராதவர்கள். சர்ச்சையாக எதுவும் பேசாதவர்கள்.ஆனால் கமல் அப்படியா? மொழி மதம் சாதி பற்றி சர்ச்சை கருத்துக்களை பேசி வந்தவர்தான்.இதுகூட சீமானுக்கு தெரியவில்லையா புரியவில்லையா?


பேசும் தமிழன்
ஜூன் 04, 2025 08:15

உங்களிடம் இருக்கும் ஆதாரத்தை கொடுக்க வேண்டியது தானே..ஒரு மொழியை பற்றி பேசும் போது....அதற்கான எதிர்வினை என்ன என்பதை அறிந்து பேச வேண்டும்.


Thamizhselvan
ஜூன் 04, 2025 00:03

இதுவரை ஆய்வு செய்த மொழி இயல் ஆய்வாளர்கள் தமிழிலிருந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகள் தோன்றியதாக கூறியுள்ளனர். மறுப்பவர்கள் ஆதாரத்துடன் மறுக்க வேண்டும் என்பது சரியான கருத்து தான் இப்போது கூட நீதிமன்றம் நினைத்தால் மொழியியல் வல்லுனர்களிடம் கருத்தைக் கேட்டு நீதி வழங்கலாமே


vadivelu
ஜூன் 04, 2025 05:45

நீங்கதானே கன்னடம் தமிழில் இருந்து வந்தது என்று சொல்கிறீர்கள், ஆதாரத்தை கொடுத்தால் சரியாகி போகுமே. எப்போதுமே சரி என்பதற்குத்தான் ஆதாரம் வேண்டும்.


SVR
ஜூன் 04, 2025 08:55

திராவிட மொழிகளின் காலங்களை ஆய்வு செய்தவர்கள் யார் யார்? இந்திய அரசின் தொல் பொருள் சர்வேயின் திராவிட மற்றும் வடமொழி பிரிவுகளின் கல்வெட்டு துறை மைசூரில் உள்ளது. அதே போல் அரபிக் மொழிக்கும் நாக்பூரில் உள்ளது. மைசூரில் உள்ள இந்த அலுவலகத்தில் திராவிட மற்றும் வடமொழிகள் கி மு மற்றும் கி பியில் எப்போதிலிருந்து எந்த எந்த நூற்றாண்டுகளில் எப்படி எப்படி வளர்ச்சி அடைந்தது என்று ஆய்வுகளின் மூலம் தெளிவாக அங்கு இருக்கிறது. அதன் மூலம் திராவிட மொழிகள் அனைத்தும் வட கர்நாடகாவில் உள்ள பாதாமி வரலாற்று பெயர் வாதாபி என்ற இடத்திலிருந்து பிறந்தன என்று தெரிய வரும். தமிழ் தான் ஒஸ்தி பிற மொழிகள் அதில் அடக்கம் என்று சொல்லித்திரிவது அபத்தமான ஒன்று. எல்லா மொழிகளும் செம்மொழிகள் தான். எந்த ஒரு மொழியையும் இழிவு படுத்தாமல் மத்திய அரசு சும்மா இருக்கிறது. கல்வெட்டு துறை சொல்வதை வைத்துத்தான் வரலாறு எழுதப்படுகிறது. அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போதே இந்த துறையை துவக்கி எவ்வளவோ விஷயங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் படித்து தெரிந்து பின் இந்த பார்த்தசாரதி என்று பெயர் வைக்கப்பட்டவர் பேச வேண்டும். இதெல்லாம் இல்லாமல் பொதுவாக பேசினால் விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டித்தான் வரும். நேற்று இந்த ஆள் நீதிபதியிடம் வாங்கி கட்டி கொண்டது அதிகம். ஒரு வசனம் - துஷ்ட பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வர். அதுதான் நடந்திருக்கிறது. இவர் வேண்டுமானால் இறுமாப்பில் நான் படத்தை கர்நாடகத்தில் வெளியிட போவதில்லை என்று சொல்லலாம். அது ஒரு மனிதனுக்கு அழகல்ல. அது சரி. இதெல்லாம் பற்றி யார் கவலை பட்டார்கள். கன்னட மக்களோ இவர் மன்னிப்பு கேட்கும் வரை விடப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். நீதி பதியும் அதைத்தான் எதிர் பார்க்கிறார். பார்போம் என்ன நடக்க போவதென்று.


GMM
ஜூன் 03, 2025 19:55

நதி நீர் வேண்டும் என்றால், முன்பு போல் சென்னை மாகாணம் ஆக்க குரல் கொடுக்க வேண்டும். மாநில கட்சி அங்கீகாரம், தேர்தல் கூட்டணி கூடாது. சீமான், கமல் போன்றவர்கள் தலையெடுக்க கூடாது.


சந்திரன்
ஜூன் 03, 2025 19:37

தமிழ் நல்ல மொழி என்றால் அதில் இருந்து ஏன் கனட மொழி உருவானது


Abdul Rahim
ஜூன் 03, 2025 17:54

இந்நேரம் திரு. கமல் அவர்கள் பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் இங்கே வலதுசாரி வாசகர்களின் எழுத்தும் எண்ணமும் அப்படியே மாறி இருக்கும் கமலுக்கு ஓடோடி வந்து வக்காலத்து வாங்கி இருப்பார்கள் ஆனால் இப்போது கமல் அவர்கள் எதிரணி என்பதால் இங்கே கன்னடத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள் இதுதான் சமயம் என்று தமிழை அவமதிக்கிறார்கள் இரட்டை நாக்கு கொண்டவர்கள்.


சந்திரன்
ஜூன் 03, 2025 19:29

உங்க முன்னோர்கள் யார்? நீ எதில் இருந்து முஸ்லிமாக மாறினாய்! நெஞ்சை தொட்டு சொல்...


vbs manian
ஜூன் 03, 2025 17:41

கன்னடம் த மிழிலிருந்து வந்தது என்பதற்கு இவர் ஆதாரத்தை கொடுக்க முடியுமா.


Abdul Rahim
ஜூன் 04, 2025 12:20

என்னை ஆய்வு செய்யும் முன்பு உன்னை ஆய்வு செய்யவும் ஆதியில் இங்கு இருந்த மதம் எது அதை சிதைத்து எந்த மதம் உருவானது என்ற உண்மையை மனசாட்சி தொட்டு சொல்லு பாப்போம் ....


Abdul Rahim
ஜூன் 03, 2025 17:40

தமிழை தாய்மொழியாக கொண்ட நமது மலர் இப்படி தமிழர் விரோத கருத்துக்களை வெளியிடுவோரை கண்டிக்காமல் இருப்பது வேதனை தரும் ஓன்று வாய்க்கு வந்தபடி எழுத யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது மற்றவர்களுக்கு மட்டும்தான் அக்கவுண்டை பிளாக் செய்வீர்களா இவர்களை கண்டிக்கவே மாட்டீர்களா.


V.Mohan
ஜூன் 03, 2025 17:27

கமலகாசன் ஏற்கனவே சண்டி மாடு. இதுல சீமான் அதற்கு சாராயம் ஊத்தினார்னா,- விளங்கிடும். ராஜ்ய சபா சீட்டு தந்ததுக்கு , ஞான சேகரன் வழக்கு, டாஸ்மாக் வழக்கு, மின்சார கட்டணம், பாலியல் & கொலை வழக்குகள் போன்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை சரியாக திசை திருப்பிவிட்டார் கமலகாசன். நல்ல நன்றி உணர்வு ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை