உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூரில் புதிய விமான நிலையம் ; இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்

ஓசூரில் புதிய விமான நிலையம் ; இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்து இருக்கிறது.தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுடன் மொத்தம் 6 விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என அங்குள்ள மக்களும், தொழில் துறையினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து, 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் ஓசூரில் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, 2 இடங்களை(ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று) தேர்வு செய்து இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது.இந் நிலையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம்,விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது. இந்த இரு இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Siva Kumar.R.s
ஏப் 23, 2025 14:19

ஓசுர் ஏற்போர்ட்


பாமரன்
ஏப் 22, 2025 16:33

இரு விமான நிலையங்கள் இடையே 150 கிமீ இருக்கனும்கிறது ஒரு குறிப்பிட்ட கால காண்ட்ராக்ட் ஷரத்து மட்டுமே. ஏற்கனவே இருக்கும் விமான நிலைய மாலிக் ஒப்புக்கொண்டால் அருகே மற்றொரு விமான நிலையம் வரலாம். உதாரணமாக டெல்லி அருகில் ஏற்கனவே ஹிண்டன் விமான நிலையம் இயங்கி வருது. சென்னையில் இருந்து அங்கே செல்லும் விமானங்கள் உள்ளன. இன்னும் இரு மாதங்களில் நொய்டா ஜாவர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வருகிறது. அதேபோல் மும்பை அருகே நவிமும்பை விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பெங்களூர் விமான நிலையத்தை முரைச்சு பார்த்துட்டு இருக்கும் நம்ம ஸ்பான்ஸர் அடேஷ்னிக்கு அதை குடுத்துட்டு ஓசூரும் உமக்கு தான்னு சொன்னால் ப்ராப்ளம் சால்வ்ட்... இதுதான் நடக்க போகுது


N Srinivasan
ஏப் 22, 2025 13:57

இந்த தலைப்பு செய்தி வச்சு 2026 வரை விமான நிலையம் கொண்டு வந்து விட்டோம் என சொல்லி ஓடிவிடுவார்கள். மற்றபடி உள்ளே உள்ள பிரச்சனைகள் எல்லாம் வெளியே சொல்ல மாட்டார்கள்


sankaranarayanan
ஏப் 22, 2025 13:10

ஆமாம் பரந்தூர் விமானத்தளம் திறந்தாச்சு இனி ஓசூரு ஒண்ணுதான் பாக்கி என்னடா இது விதண்டா பேச்சு வீணான முயற்சி


S.Martin Manoj
ஏப் 22, 2025 14:43

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறந்தாச்சுபோல,


Priyan
ஏப் 22, 2025 15:53

பரந்தூர் விமான நிலையம் கண்டிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பயன் பாட்டுக்கு வருவதறகு முன்பாக பயன் பாட்டுக்கு வந்து விடும்


Rajan
ஏப் 22, 2025 12:10

Karnataka is not allowing an airport. They have an agreement which is valid until 2030 and after that only another airport can come within an 150KM radius. It is possible that we can acquire lands and do the planning and start the construction after 2030 This will be a huge advantage for Hosur


Ramesh Sargam
ஏப் 22, 2025 11:45

ஓசூரில் விமான நிலையம் கட்டாயத்தேவை. ஓசூர் நன்றாக வளர்ந்து விட்டது. பல தொழிற்சாலைகள். அருகில் கிருஷ்ணகிரியில் உள்ளவர்கள், மிக அருகில் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ளவர்களுக்கு மிகமிக பயனுள்ளதாக இருக்கும். இப்பொழுது பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ளவர்கள் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் செல்ல குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் ஆகும். ஆனால் ஓசூரில் விமானம் நிலையம் நிறுவப்பட்டால் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம். ஆகையால், ஓசூர் விமான நிலையம் மிக மிக தேவையான ஒன்று. அரசியல் எதுவும் செய்யாமல் உடனே கட்டுமானத்தை தொடங்கவும். நன்றி.


பாமரன்
ஏப் 22, 2025 16:34

ரமேஷ்ட்ட இருந்து தமிழ் நாட்டை திட்டாம கருத்து,... அடடே ஆச்சர்ய குறி ... ரெம்ம்ம்ம்ம்ப பாதிச்சிருப்பாரு போல


Chan
ஏப் 22, 2025 11:10

மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவாக முடிவெடுத்து பணிகளை துவக்கவேண்டும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 22, 2025 11:04

இது பொய்யான செய்தி.....G-Square வாங்கி போட்ட நிலத்தை விற்க போலியாக விமானநிலையம் வரும் என்று நம்பவைக்கிறது இந்த விடியாத திமுக அரசு.. ஒரு பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மற்றொறு விமானநிலையம் அமைக்க குறைந்த பட்சம் 100 கிமி ரேடியஸ் இருக்க வேண்டும்.. ஒசூருக்கும் பெங்களூர் விமான நிலையத்திற்க்கும் (KIA)இடையே 70கிமி தான் உள்ளது.. ஆகையால் ஒசூரில் விமானநிலையம் வருவது கடினமே.. இதில் காங்கிரஸ் அரசு கனகபுராவில் விமானநிலையம் அமைக்க ஆயத்த வேலைகளை ஆரம்பித்து விட்டது.....!!!


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 22, 2025 12:08

இந்த அறிக்கையை ஓரம் கட்டுவார்கள். தேர்தலின்போது மைய ஒன்றிய நடுவண் அரசு விமான நிலையத்துக்கு நிதி அளிக்கவில்லை என்று பிரச்சாரம் செய்வார்கள். விமான நிலையம் வரப்போகிறது என்று சொல்லி ஓசூருக்கு அருகில் உள்ள தொகுதிகளில் ஒட்டு அறுவடை செய்வார்கள். ஆனால் கடைசி வரை விமான நிலையம் வராது . ஜி ஸ்கொயர் பண அறுவடை செய்யும்.


Vasan
ஏப் 22, 2025 10:42

In Indian history, roadway, railway, airway is the sequence for transportation. Hosur is well connected with other places of Tamilnadu by road, one reason being its proximity and being en-route to Bangalore. But there is no railway connectivity for Hosur with other places of Tamilnadu, except Salem. Train services has to be operated between state capital Chennai and Hosur, but it is said that many bus services are operated by Politicians or their binamy and hence there is no railway development. Central Govt and Railway ministry should intervene in this and operate trains between Hosur and Chennai, Madurai, Tirunelveli. Airport can be thought of afterwards. When there is a low hanging fruit, why climb the tree and pluck a fruit from top of the tree?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை