உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அந்துமணி பதில்கள் – 03.10.2026

அந்துமணி பதில்கள் – 03.10.2026

டி.ஜெயசிங், கோவை:  தமிழக முதல்வர் விஜய், அமெரிக்க அதிபர் டிரம்பையே எதிர்த்து போட்டியிடுவார் என்கின்றனரே, த.வெ.க., தொண்டர்கள்?  முதல்வர் விஜய், வாயே திறப்பதில்லை; அப்படியே பேசினாலும், மனதார பேசுகிறார். டிரம்ப் போல் அவர், வாய்க்கு வந்ததை பேச வேண்டும் என, அவரது தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற னரோ!    என்.ஆல்பா, சென்னை:  மதுரை, நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம் தனியார் மயமாகிறதாமே?  நல்லது தானே! பிரச்னைகள் எழுந்தால், ‘தனியார் தான் செய்தனர்; நாங்கள் செய்யவில்லை’ என கைகாட்டி விடாமல், தரமாக போடப்படுகிறதா என்பதை அரசு கண்காணிப்பது நலம்!    ஏ.மீனலோசனி, பாண்டி:  ‘கூட்டணி கட்சிகளிடம் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...’ என்று, பா.ஜ.,வைச் சேர்ந்த, எச்.ராஜா கூறியுள்ளாரே?  பலரும் சொல்வதை, எச்.ராஜாவும் சொல்லி இருக்கிறார். இதோடு, நெருக்கமாக பழகும் அரசியல்வாதிகளிடமும், சொந்த கட்சியினரிடமும் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! அவர்களின் இன்னொரு முகம், விஜய்க்கு தெரியாமலேயே போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது!    எஸ்.டேனியல் ஜூலியட், கோவை:  ‘நமக்கு துரோகம் செய்தவர்களை மறக்கவும் கூடாது; மன்னிக்கவும் கூடாது’ என்று, தி.மு.க.,வின் உதயநிதி ஸ்டாலின் பேசி, அண்ணாதுரையின், ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற கொள்கையை, காற்றில் பறக்க விட்டு விட்டாரே?  இது மட்டுமா... அண்ணாதுரையின் பல கொள்கைகளை மறந்து விட்டதன் காரண மாக, தி.மு.க., இன்று அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.    பி.ராஜ், மதுரை:  ‘அ.தி.மு.க., கரைவதற்கு, ஒன்றும் சர்க்கரை அல்ல; இரும்பு’ என்கிறாரே, அதன் பொதுச்செயலர் பழனிசாமி?  அந்த இரும்பு இப்போது துரு பிடித்து உதிரத் துவங்கி விட்டதே, ராஜ்!    ம.ஆதவன், சென்னை:  சுந்தர் பிச்சை ஒரு, ‘மான்ஸ்டர் – அசுரன்’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளாரே?  கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, சுந்தர் பிச்சை ஒரு இந்தியர். அவரை ‘அசகாய சூரன், மிகவும் கெட்டிக்காரன்’ என்பதை தான் டிரம்ப் இவ்வாறு ஜாலியாக கூறியுள்ளார். அதற்கு சுந்தர் பிச்சையும், ‘இன்னும் கொஞ்ச நல்ல வார்த்தைகளில் பாராட்டி இருக்கலாம்’ என, கலாய்த்துள்ளார்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை