உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த வீடு; மீட்பு பணியில் தேசிய மீட்புக்குழு!

திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த வீடு; மீட்பு பணியில் தேசிய மீட்புக்குழு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து மண்ணுக்குள் புதைந்த வீட்டில், சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம், 14 கி.மீ துாரம் சுற்றளவு கொண்டது. இந்த மலையை ஆக்கிரமித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி, குடிசை, ஓடு கூரையால் ஆன வீடுகள் கட்டப்பட்டு, 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vrbn8f0s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 5:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மழை சற்று குறைந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின் மீது மண் சரிந்து காணப்பட்டது.குடிசை வீட்டில் வசித்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் நிலச்சரிவில் சிக்கியதாகவும் தகவல் பரவியது.தகவலறிந்த தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட முயன்றனர். இருட்டாக இருந்ததால், மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை. தற்போது, மண்ணுக்குள் புதைந்த வீட்டில், சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியை சுற்றியுள்ளவர்களை மீட்டு, தனியார் பள்ளியில் முகாம் அமைத்து, 15க்கும் மேற்பட்டோரை தங்க வைத்துள்ளனர்.

இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சமூக வலைதளத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும். நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Shunmugham Selavali
டிச 02, 2024 11:44

ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு அரசு பட்டா வழங்க கூடாது, மாற்று இடம், இலவச வீடு எதுவுமே வழங்க கூடாது. கடுமையான தண்டணை வழங்க வேண்டும்.


MARI KUMAR
டிச 02, 2024 10:51

பத்திரமாக மீட்க வேண்டும்


ஆரூர் ரங்
டிச 02, 2024 10:37

ஆட்சிக்காலத்தில் ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் இப்போ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் என்கிறார். தி.மு.க வும் அந்த ஆக்கிரமிப்பு அட்டகாசத்தை எதிர்க்கவில்லை. வாக்குவங்கி சார். முக்கியம் சார்.


புதிய வீடியோ