உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணம் கொடுத்தால்தான் கலைஞர் இல்ல திட்டத்தில் வீடு; தி.மு.க., தொண்டரின் கொந்தளிப்பு

பணம் கொடுத்தால்தான் கலைஞர் இல்ல திட்டத்தில் வீடு; தி.மு.க., தொண்டரின் கொந்தளிப்பு

குடிசை வீட்டில் வாழும் தி.மு.க., தொண்டனுக்கே வீடு இல்லை என ஆதங்கத்தில் வெளியிட்ட வீடியோ ரிஷிவந்தியம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025 - 26ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்காக பயனாளிகள் தேர்வு தற்போது வேகமாக நடந்து வருகிறது.இந்நிலையில், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட, திருக்கோவிலுார் ஒன்றியம், பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 34; தி.மு.க., தொண்டர். இவர், தனக்கு வீடு கிடைக்காத ஆதங்கத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.அதில், 'நான் தி.மு.க., வில் இருக்கிறேன். எனக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். தேர்தல் வந்தால் தி.மு.க., வேட்பாளருக்காக ஒண்ணாவது பட்டனில் போடு, இரண்டாவது பட்டனில் போடு என ஓட்டு போடுவதற்காக பிரசாரம் செய்து, ஓட்டு கேட்டு ஜெயிக்க வைத்தால், இப்போது என்னிடம் 30 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள் எப்படி இது? என்ன நியாயம்' என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொத்தனார் வேலை செய்யும், குடிசை வாசியான இவரது வீடு மழை பெய்தால் ஒழுகும் என்பதால் கூரையின் மீது தார்பாயை போட்டு மூடி வைத்திருக்கிறார். தி.மு.க., தொண்டனுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு எந்த நிலை என எதிர்க்கட்சியினர் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி களமாடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Durgadevi Rangaraj
மே 21, 2025 11:47

எங்களுக்கும் கலைஞர் வீடு வந்தது.எங்கள் வீடு ஒரு சிறிய குடிசை வீடு அதில் நான்கு மகள்கள் ஒரு மகனுடன் நாங்கள் வசித்து வருகிறோம். மூன்று வருடங்கள் கடினப்பட்டு கல் மண் ஆகியவை வாங்கி விட்டோம் தற்பொழுது பணம் கொடுக்காத காரணத்தால் ஆர்டரை கேன்சல் செய்து விட்டார்கள்


RAJADURAI JP
மே 21, 2025 04:43

இது போன்று தான் என் வீடு உள்ளது. எனக்கு 2024- 2025 ம் ஆண்டு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்க்கு ஒர்க் ஆர்டர் கூடுத்தார்கள் ஆனால் நான் பல முறை வீடு கேட்டு அலுவலகம் சென்றேன். அதற்க்கான சரியான பதிலை யாரும் சொல்லவில்லை. மழைகாலங்களில் கூரை வீடுகளில் தண்ணீர் வந்து விடுகிறது. அதனால் சொந்த முயற்சியில் தகர சீட்டு போட்டேன். இதில் ஒரு சில அதிகாரிகள் செய்யும் செயலால் என்னை போன்ற ஏழைகள் பாதிக்க படுகிறோம்...


theruvasagan
மே 20, 2025 22:29

காசு வாங்காமல் திட்டத்தை அமல் படுத்தினால் அந்த திட்டத்தின் குறிக்கோளே சிதைந்துவிடும். அது அன்னாரின் பெயருக்கு செய்யப்படும் அவமரியாதையாகும்.


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 20, 2025 16:54

போட்டோவில் இருப்பது பழைய அறிவாலயம் போல இருக்கு.....!


Bhaskaran
மே 20, 2025 16:25

அதெப்படி காசு வாங்காமல் வீடு கொடுப்பது லஞ்சம் தமிழக அரசு அதிகாரிகள் இரத்தத்தில் ஊறியதாச்சே


அப்பாவி
மே 20, 2025 16:09

எதுக்கு கட்டுமர வுடெல்லாம். 90 சதவீரம் மண்.10 சதவீதம் சிமிண்ட் போட்டு கட்டியிருப்பானுக. நீ இருக்குற வீடே ஸ்ட்ராங்கா இருக்கு. பேப்பரில் கெவருமெந்ட் வூடுகள்.இடிஞ்சி விழற நியூஸல்லாம் படிக்கலியா?


Yaro Oruvan
மே 20, 2025 14:12

200 ஓவா உப்பி எரநூறு ஓவாய்க்கு மேல ஒரு பைசா எதிர்பார்க்கப் புடாது .. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்


NIyayanidhi
மே 20, 2025 13:16

தி.மு.க தொண்டர்களே இனியாவது விழித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை உங்கள் பிள்ளைகள் வாழ்வை பாருங்கள். அடுத்தவர்களுக்கு பல்லக்கு தூக்கும் வேலையை தவிர்த்து விடுங்கள்.


sridhar
மே 20, 2025 12:43

உனக்கு அறிவு இருந்தா திமுகவுக்கு வோட்டு கேட்டுஇருப்பியா . நீ ஒரு தமிழின துரோகி .


Narasimhan
மே 20, 2025 10:42

நீதி மன்றங்கள் கண்ணை மூடிக்கொண்டிருப்பார்களே. வேண்டாததெற்கெல்லாம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை என்பார்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை