உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகாவிஷ்ணு சொற்பொழிவுக்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் வந்தது எப்படி?: சமூக வலைதளத்தில் வைரல் பதிவு

மகாவிஷ்ணு சொற்பொழிவுக்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் வந்தது எப்படி?: சமூக வலைதளத்தில் வைரல் பதிவு

சென்னை: மகாவிஷ்ணு சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், அந்த நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் குரல் கொடுத்தார். மகாவிஷ்ணுவின் பேச்சு தங்களை அவமதிப்பதாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய அடுத்த நாளே ஆசிரியர் சங்கருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அவரை நேரில் சென்று பாராட்டினார். மேலும், ஆசிரியரை அவமதித்த மகாவிஷ்ணுவை சும்மா விடுவதில்லை என்றெல்லாம் அமைச்சர் பேசினார். இந்த நிலையில், சமூக வலைதளத்தில் ந.முத்துராமலிங்கம் என்பவர் வெளியிட்ட ஒரு பதிவு வைரலாகியுள்ளது.

அவரது பதிவு:

நேற்றுவரைக்கும் நமக்கெல்லாம் யார்னே தெரியாத ஒருத்தர (மகாவிஷ்ணு) எப்படித் தமிழகம் முழுவதும் பேமஸ் ஆக்கினாங்க? நமக்குதான் யார்னு தெரியாது.. ஆனா ரெண்டு பள்ளிகள்ல நிகழ்ச்சிய ஏற்பாடு செஞ்ச ஆசிரியருக்கு தெரியாதா? அனுமதி கொடுத்த டி.இ.ஓ, சி.இ.ஓ-க்களுக்குத் தெரியாதா?அடுத்ததா இவர் பேசினது ரெண்டு ஸ்கூல் ஒன்னு சைதாப்பேட்டைல இருக்கு, ரெண்டாவது அசோக்நகர்ல இருக்கு, ரெண்டுக்கும் இடைல நாலு கிலோமீட்டர் தூரம். இதுல எதுக்கு அந்தப் பிரச்னை பண்ணின பார்வையற்ற ஆசிரியர், தனது சைதாப்பேட்டை பள்ளியிலிருந்து அசோக்நகர் பள்ளிக்கு வந்தார் என்பது முதல் கேள்வி.அப்படியானால் இவர் கர்மா பற்றியும், மறுபிறப்பு பற்றியும் பேசுவார் என்று முன்பே தெரிந்து வந்தாரா? அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிந்தேதான் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தி, அதில் மிகச்சரியாக ஒரு பார்வையற்ற ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து அதைப் பிரச்னையாக்கி, இவருக்கு விளம்பரம் தருகிறார்களா? அதனால் இவர்களுக்கு என்ன பயன்?

டூல்கிட்

ஒரே கல்லில் ஒரு மாமரத்தையே சாய்க்கும் வல்லமை திராவிடத்திற்கும் அதன் தாய்க்கழகமான மிஷனரிகளுக்கும் உண்டு. முருகன் மாநாடு நடத்தியதாலும், கருணாநிதி நாணய வெளியீட்டு நிகழ்ச்சியாலும் அதிருப்தியில் இருக்கும் சிறுபான்மையினரைக் குளிர்விக்க, இதைத் திட்டமிட்டு ஒரு டூல்கிட்டாகவும் பயன்படுத்தியிருக்கலாம். அன்பில் மகேஷிலிருந்து முதல்வர் வரை பொங்கியதிலிருந்து சிறுபான்மை மக்கள் மனம் நிச்சயம் குளிர்ந்திருக்கும்.ஏனென்றால், இந்த திடீர் ஞானி, இதற்கு முன்பு பல திமுக அமைச்சர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இருக்கின்றன. என்னைப் பொருத்தவரை எந்தவொரு ஆன்மிகவாதியும், சனாதனவாதியும் திமுக.,வினருடன் புகைப்படம் எடுப்பதை விரும்பமாட்டார்கள். நான் எடுத்ததில்லை. புகைப்படம் எடுத்ததாலேயே ஒருவனைச் சந்தேகிக்கலாமா என்று கேட்டால்? சத்தியமாகச் சந்தேகிக்கலாம். ஹிந்துதர்மத்தை நேசிப்பவனால் அதை அழிக்க நினைப்பவர்களுடன் பக்கத்தில் நிற்கக்கூட முடியாது என்பதுதான் உண்மை.

என்ன லாபம்

அடுத்ததாக, இவரைப் பிரபலப்படுத்துவதால், இவர்களுக்கு என்ன லாபம் என்றால்...? அதுதான் மிஷனரிகளின் நூற்றாண்டுத் திட்டம். நாளை இவரை வைத்தே நமது தர்மத்தை அசிங்கப்படுத்துவார்கள், பாலியல் வழக்கில் கைது செய்து ஒரு ஆன்மிகப் பேச்சாளரின் யோக்கியதையைப் பாருங்கள் என்பார்கள். இவரும் அவற்றைப் பெருமையுடன் எதிர்கொள்வார். ஏனென்றால், இவர் காட்டில் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. இவரை இன்று சங்கி என்று நினைப்பவர்கள், நாளை உணர்வார்கள். இவ்வாறு ந.முத்துராமலிங்கம் என்பவர் பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், மகாவிஷ்ணு திமுக அமைச்சர்களான அன்பில் மகேஷ், மனோ தங்கராஜ், மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக.,வுக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி உடனும் நெருக்கமாக எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

RaajaRaja Cholan
செப் 14, 2024 10:34

இன்னொரு பெயரில் வர ஆரம்பித்துவிட்டது


Dharmavaan
செப் 13, 2024 07:48

ஆரிய வந்தேரிஜாதி பெயரை நீ ஏன் வைத்துக்கொண்டிருக்கிறாய் அதை நீக்கிவிடு மானமிருந்தால்


kantharvan
செப் 12, 2024 10:26

எப்புடி ஒன்றிய அரசின் தோல்விகளை ,நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்கு ஹிந்து முஸ்லீம் பிரச்சினை என்று செட்டப் செய்வார்களே அதை போலவே வா ???


Murthy
செப் 10, 2024 12:49

அரசின் நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்காக இதை ஏதோ பிஜேபி-திமுக பிரச்சனையாக கட்டமைக்கிறார்கள் . ...


sankaran
செப் 10, 2024 12:31

கிட்ட தட்ட 5000 கொலைகள்.. இது ஒரு திசை திருப்பும் வேலை...


M Ramachandran
செப் 10, 2024 09:56

இதெல்லாம் திருட்டு திராவிட கும்பலின் செட்டப் தான்


kantharvan
செப் 10, 2024 00:18

உண்மைதான் ஹிந்துக்கள் அறியாமையை எப்படியெல்லாம் காசாக்குகிறர்கள் என்பதை இனியாவது அறிவார்ந்த ஹிந்துக்கள் புரிந்து கொள்வார்கள் .


kantharvan
செப் 09, 2024 23:26

இதென்னடா இன்னும் முஸ்லீம் கிறித்தவர்களை இதில் இழுக்கலையே என பார்த்தால் இப்போது ஆரம்பித்து விட்டார்கள் அல்லவா வெறியர்கள் . இதென்னடா இப்போது சிறுபான்மையினருக்கு உச்சி குளிர்ந்து இருக்கும் . சிறுபான்மையினர் என்ன உங்களை போல வெறி புடித்த வெறி யர்களா என்ன? அடுத்தவரை அவமானப்படுத்தி அதில் சந்தோசம் தேட??


சுலைமான்
செப் 10, 2024 02:23

நல்ல ஜால்ரா


RaajaRaja Cholan
செப் 14, 2024 10:37

கோவை காஸ் வெடியில் கலவரம் பண்ண முயன்ற கூட்டம் சங்கிகளை கலவர காரண engiraan . இந்த அமைதி கூட்டம் இருக்கும் ஏந்த நாட்டிலாவது கலவரம் இல்லாமால் உண்டா பச்சை


kantharvan
செப் 09, 2024 23:22

அப்போ நேத்து கொடுத்த முட்டெல்லாம் பாழாய் போனதா ? மலரே மௌனமா? மௌனமென்ன வேதமா? அப்புறம் அந்த அப்பாடக்கர் திமுக காரங்க கிட்ட அருட்பா தொகுப்பை தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் வைக்க கோரியே திரு மகேஷ் மற்றும் திரு லியோனி அவர்களை சந்தித்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை ஆனால் அதை கூட உரைக்காத கல் எப்படியெல்லாம் இட்டு காட்டுகிறார்கள் என்பதை அறிவார்ந்த சமூகம் அறிந்து கொள்ளட்டும் .


M BASKAR
செப் 09, 2024 22:32

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௩ - 563)  குடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப் போய் அழிவை அடைவான் தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.   (௫௱௬௰௧ - 561)  ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும் (௫௱௬௰௧) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான். (௫௱௬௰௧) —மு. வரதராசன் தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி. (௫௱௬௰௧) —சாலமன் பாப்பையா நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும் (௫௱௬௰௧) —மு. கருணாநிதி கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.   (௫௱௬௰௨ - 562)  நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும் போது கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக (௫௱௬௰௨) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும். (௫௱௬௰௨) —மு. வரதராசன் நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க. (௫௱௬௰௨) —சாலமன் பாப்பையா குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும் (௫௱௬௰௨) —மு. கருணாநிதி வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௩ - 563)  குடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப் போய் அழிவை அடைவான் (௫௱௬௰௩) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான். (௫௱௬௰௩) —மு. வரதராசன் குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி. (௫௱௬௰௩) —சாலமன் பாப்பையா குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும் (௫௱௬௰௩) —மு. கருணாநிதி இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௪ - 564)  'எம் அரசன் கடுமையானவன்' என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான் (௫௱௬௰௪) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான். (௫௱௬௰௪) —மு. வரதராசன் நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும். (௫௱௬௰௪) —சாலமன் பாப்பையா கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும் (௫௱௬௰௪) —மு. கருணாநிதி அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து.   (௫௱௬௰௫ - 565)  எளிதாகக் காணமுடியாத தன்மையும், கடுமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும் (௫௱௬௰௫) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது. (௫௱௬௰௫) —மு. வரதராசன் தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம். (௫௱௬௰௫) —சாலமன் பாப்பையா யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும் (௫௱௬௰௫) —மு. கருணாநிதி கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்.   (௫௱௬௰௬ - 566)  கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும் (௫௱௬௰௬) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும். (௫௱௬௰௬) —மு. வரதராசன் சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும். (௫௱௬௰௬) —சாலமன் பாப்பையா கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும் (௫௱௬௰௬) —மு. கருணாநிதி கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.   (௫௱௬௰௭ - 567)  கடுமையான சொல்லும், முறை கடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும் (௫௱௬௰௭) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும். (௫௱௬௰௭) —மு. வரதராசன் கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும். (௫௱௬௰௭) —சாலமன் பாப்பையா கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும் (௫௱௬௰௭) —மு. கருணாநிதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை