உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலுவை பிடிவாரன்ட் வழக்குகள் எத்தனை? டி.ஜி.பி., கமிஷனருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

நிலுவை பிடிவாரன்ட் வழக்குகள் எத்தனை? டி.ஜி.பி., கமிஷனருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரன்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன'' என டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஜூலை 14) ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது, அவர் கூறியதாவது:* தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரன்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.* நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்கள் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும்.* வாரன்டை செயல்படுத்தவில்லை என்றால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புதிதாக வாரன்ட் பிறப்பிக்க கோர வேண்டும்.* எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாரன்ட்களை நிலுவையில் வைக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை.* எத்தனை வழக்குகளில் பிடிவாரன்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஜூலை 23ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூலை 14, 2025 21:29

போட்ட வழக்கு பிடிவாரண்ட்டை அமுல் படுத்த. இதுக்கு தமிழ்நாடுமொத்தத்துக்கும் புள்ளி விவரம் எதுக்கு? தெரிஞ்சு இந்தவழக்கில் என்ன பிரயோஜனம்?


அப்பாவி
ஜூலை 14, 2025 21:26

தருமி ரேஞ்சுக்கு கேள்விகள்.


Padmasridharan
ஜூலை 14, 2025 16:58

நிலுவையில் வைக்க காரணமே அதிகாரத்தை பயன்படுத்தி பணத்த பிச்ச கேட்டு வாங்கறதுதான் சாமி. காக்கிச்சட்ட காவல்துறைய கருப்புச்சட்டை நீதி துறைதான் இனி கட்டுப்படுத்தி மக்கள காப்பாத்தணும். இவங்க அட்டூழியம் நிறைய குற்றங்களை மறைச்சி இருக்காங்க. புதிய குற்றவாளிகள உருவாக்கியிருக்காங்க. கடற்கரை போன்ற பொது இடங்களில் பாக்கும் மக்களை எல்லாம் ஃபோட்டோ / வீடியோ எடுத்து அடிச்சு மிரட்டியடிச்சு பணம்/பொருள் புடுங்கறதுதான். . வண்டியில ஏத்தி அறைக்கும் கூட்டி போறாங்க.. சென்னை திருவான்மியூர் கடற்கரையிலிருந்து


M S RAGHUNATHAN
ஜூலை 14, 2025 15:27

என்னது இது ? உயர் நீதி மன்றம் தூக்கத்தில் இருந்து திடீர் என்று விழித்துக் கொண்டுள்ளது ? இதற்கு யார் காரணம் ? திமுக பேச்சாளர்கள் : ED தான் காரணம் கூட்டணி கட்சிகள்: மோடி காரணம் வீரமணி: பார்பன ஆதிக்கம் மக்கள்: இதெல்லாம் சும்மா டிராமா


தத்வமசி
ஜூலை 14, 2025 15:20

அதிருக்கட்டும். தண்டனை அறிவித்த பின்னும் பல உதவாத காரணங்களை சொல்லி எத்தனை பேர் வெளியே சுற்றி வருகின்றனர் ? ஒப்புக்கு ஒரு காரணத்தைச் சொல்லி ஜாமீன் வாங்கி எத்தனை பேர் பதவிகளை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர் ? குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் வெளியே சுற்றிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் ? சிறைக்குச் சென்ற பின் எதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி வெளியே வந்து சுற்றித் திரிபவர்கள் எத்தனை பேர் ? இப்படி பல விதங்களில் குற்றவாளிகள் வெளியே சுற்றிக் கொண்டிருந்தால் நாடு எப்படி உருப்படும் ?


முக்கிய வீடியோ