உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனிதாபிமானம் செத்துவிட்டது: ஹிந்து முன்னணி கவலை

மனிதாபிமானம் செத்துவிட்டது: ஹிந்து முன்னணி கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: தமிழகத்தில் தினசரி படுகொலைகள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. மனிதாபிமானம் கேள்விக்குறியாகி வருவதாக ஹிந்து முன்னணி கவலை தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தமிழகத்தில் படுகொலைகள், கூலிப்படையின் கொடூரம், கொலையாளிகள் சரண்டர் என நாளுக்கு நாள் அதிகமாக நடக்கின்றன. இத்தகைய கொலைகளுக்கு காரணம் தனிப்பட்ட விரோதம் என்ற காரணத்தை தமிழக அரசு சொல்லி சமாதானம் தேடுகிறது. கொடூர குற்றவாளிகளை தண்டிப்பதில் காட்டும் அலட்சியம், குற்றச் செயல் செய்வதற்கு தைரியத்தை கொடுக்கிறது என்ற உளவியல் தகவல் உண்மையாகிறது. பள்ளி முதல் ரயில், விமானம் வரையிலான குண்டு மிரட்டல் தொடர்கிறது. இதுவரை, அத்தகையோர் மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூலிப்படை அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீரியல் கொலைகள் அதிகரித்துள்ளன. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என, தொடர் கொலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளன. மருத்துவர், ஆசிரியர், வக்கீல்கள் மீது என, ஒவ்வொரு நாளும் நடக்கின்ற கொடூர குற்றங்களை பார்க்கும்போது, தமிழகத்தில் மனிதாபிமானம் செத்துவிட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது. கொடூர குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் விரைந்து செயல்பட வேண்டியது தமிழக போலீசாரின் கடமை. தமிழகம் ஆன்மிக பூமி, தர்ம பூமி. எனவே, இத்தகைய மனிதாபிமானமற்ற வன்முறைகள் தொடராமல் இருக்க, மாணவர்களிடையே நல்லொழுக்கம், ஆன்மிகம், உயிர்களிடத்தில் அன்பை ஏற்படுத்தும் பண்பு போன்றவற்றை வளர்க்க வேண்டும். எனவே தமிழக அரசு, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாநிலத்தில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

NAGARAJAN
நவ 22, 2024 12:25

ஏன் பாஜக ஆளும் வடமாநிலங்களின் யோக்கியதை என்ன என்று விளக்கம் அளிக்க முடியுமா


Mettai* Tamil
நவ 22, 2024 13:30

பாஜக ஆளும் வடமாநிலங்களின் யோக்கியதையை அங்க இருக்கும் எதிர்க்கட்சி காரங்க , பொது மக்கள் பாத்துப்பாங்க ....நம்ம மாநிலத்தில் நடப்பதற்கு பதில் சொல்லுங்க ...


gayathri
நவ 22, 2024 09:46

மனிதாபிமானம். அருமை. மனிதாபிமானம் உள்ள வர்கள் யார் என்பதை தெரிவிக்கவும்.


பாமரன்
நவ 22, 2024 08:52

எதாவது கதை அடிச்சி லிட்டா பாவப்பட்டு எதாவது மார்க் போட்ருவாங்க... ஆனால் இந்த ஃபில் இன் த ப்ளான்க் இருக்கே அதுக்கு தான் ரெம்ப யோசிப்போம்... அது போல தான் பத்திரிகை நடத்துவதிலும் போல... கேப் ஃபில் பண்ண யார் பேரிலெல்லாம் சிரிப்பு நிருபர் எழுத வேண்டிமிருக்கு... இது அறிக்கையா பேச்சா இமெயிலான்னு போடாம கொண்டை தெரிஞ்சிடுத்தே ஸாரே....??? ஒன்னியும் கவலை வாணாம்... ஒரு வாரத்தில் ஆடு ஸார் டூர் முடிஞ்சு வந்த உடனே டபுள் ட்ரிபிள் ட்ரீட்டா பகோடாஸ்க்கு குடுத்துடலாம்... என்ன நான் சொல்றது...


Mettai* Tamil
நவ 22, 2024 11:11

இது அறிக்கையா பேச்சா இமெயிலான்னு எதுவேனாலும் இருந்துட்டு போகட்டும் .நாட்டில் கொலை கொள்ளை நடந்தால் யார் வேணும்முனாலும் கண்டனம் தெரிவிக்கலாம் . உங்களுக்கு வேணும்னா இது கதை அடிச்சி விடுற மாதிரி தான், 2026 வரைக்கும் இருக்கும் ...ஒரு வாரத்தில் ஆடு ஸார் டூர் முடிஞ்சு வந்த உடனே கண்டிப்பா டபுள் ட்ரிபிள் ட்ரீட்டா இருக்குங்க ..அடுத்த ஊழலின் ஆட்டம் ஓட்டம் எல்லாத்தையும் உங்களுக்கு பிடித்த பகோடா சாப்பிட்டுக்கிட்டு, நடப்பதை பார்த்துக்கிட்டே இருங்க .....


Indian
நவ 22, 2024 08:47

என்கவுண்டர் ஒன்றே சரியான வழி . கொலை அதுவும் , பெண்ணை கொல்பவனை உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும்.


Indian
நவ 22, 2024 08:43

சட்டம் சரியில்லை , சட்டம் சரி இல்லாத காரணத்தால் தான் , பழிக்கு பழி , அரிவாளை வெட்டு நடக்கிறது .


Barakat Ali
நவ 22, 2024 08:26

மாநிலம் டீம்கா கையில் இருப்பதாக காடை நினைக்கிறது .... ஆனால் மாநிலம் மாபியாக்கள், லாபியிஸ்ட்டுகள், போதை யாவாரிங்க கட்டுப்பாட்டில் உள்ளது ......


Sathyanarayanan Sathyasekaren
நவ 22, 2024 07:51

தமிழக இந்துக்களுக்கு சொரணை வந்து இந்த திருட்டு திராவிட கட்சிகளுக்கும், அதன் தோழமை திருடர்களுக்கு வோட்டை போடுவதை நிறுத்தவேண்டும்.


Indian
நவ 22, 2024 08:40

நீ இப்படியே மதத்தை பிடித்துக்கொண்டிருந்தால் , நாடு முன்னேறப்போவதில்லை .


Indian
நவ 22, 2024 07:36

மத்திய அரசின் சட்டம் கடுமையாக இல்லை . பழைய சட்டத்தை காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றவில்லை


pmsamy
நவ 22, 2024 07:06

??????


சம்பா
நவ 22, 2024 05:42

தூர்தர்சன் தவிர எல்லா தனியார் டி.வீயும் தடை செய்யனும் இது முக்கியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை