உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹைதராபாத் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னையில் பத்திரமாக தரையிறக்கம்

ஹைதராபாத் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னையில் பத்திரமாக தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஹைதராபாத் சென்ற இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.சென்னையில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு இன்று( ஜூலை 29) மாலை 3:40 மணிக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கிளம்பியது. விமானத்தில் 159 பயணிகள், 6 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் நெல்லூரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டது தெரிந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9v5bkmhy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து அந்த விமானத்தை விமானி, மீண்டும் சென்னைக்கே திருப்பினார். விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
ஜூன் 29, 2025 23:43

கடந்த ஒரு மாதமாக தினசரி விமானங்களில் கோளாறு. உண்மையில் விமானங்களின் தரத்தில் கோளாறா அல்லது மெயின்டனஸ் ஊழியர்கள் அஜாக்கிரதையா..?


Ramesh Sargam
ஜூன் 29, 2025 19:55

ஒருவேளை விண்வெளியில் காத்து, கருப்பு அதிகம் சுற்றுகிறதோ. திடீரென்று கடந்த சில வாரங்களாக விமானம் விபத்தில் சிக்கும் செய்தி அதிக அளவில் வருகிறது. யாராவது நல்ல மந்திரவாதியை பார்த்து அந்த காத்து, கருப்பு அகற்ற வேண்டும்.


Anantharaman Srinivasan
ஜூன் 29, 2025 23:35

கடந்த சில வாரங்களாக அல்ல மாதங்களாக விமானம் விபத்தில் சிக்கும் செய்தி .


D.Ambujavalli
ஜூன் 29, 2025 19:24

ஓரிரு மாத்துக்குள்ளேயே அடுத்தடுத்து விமானங்களில் பழுது. என்பது அதிர்ச்சி அளிக்கிறது அடிக்கடி பயணம் செய்பவர்களின் பணிகள் இதனால் மிகவும் பாதிக்கப்படும்.


Manaimaran
ஜூன் 29, 2025 18:21

என்னனு தெரியல ஏதோ கெட்ட நேரம் போல


முக்கிய வீடியோ