உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது: இபிஎஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தமிழகத்தில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும். அதிமுக முதல்வர் வேட்பாளர் நான் தான் என அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கோவையில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: திமுக ஆட்சியிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல், போலீசார் மீது பயமில்லாமல் தொடர் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அரசு இருக்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் மாணவியை போலீஸ்காரர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

6,999 பாலியல் வன்கொடுமைகள்

போலீசார் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்கு மாறாக இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவது, மிக மிக கொடூரமான செயல். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் போலீசார் இருக்கிறார்களா? மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்களா? திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக திமுக அமைச்சர் கூறியிருக்கிறார். அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாக அறிவித்து இருக்கிறார். பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்துவதற்கு அரசுக்கு திராணி இல்லை.

தாமதம் ஏன்?

போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. கடந்த 50 மாதம் திமுக ஆட்சியில், 6,400 கொலைகள் நடந்து இருக்கிறது. இதுவும் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம். ஏன் நிரந்தர டிஜிபி நியமிப்பதில் இவ்வளவு குளறுபடி, பாரபட்சம். அரசுக்கு வேண்டப்பட்டவர் டிஜிபியாக வரவேண்டும் என்பதற்காக தான், இதுவரை அவர்கள் நிரந்தர டிஜிபியை நியமிக்கவில்லை. டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன், தகுதியானவர்கள் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

பதறுகின்றனர்

எஸ்ஐஆர் என்றாலே திமுகவினர் அலறுகின்றனர். பதறுகின்றனர். போலி வாக்காளர்களை நீக்க எஸ்ஐஆர் அவசியம். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. வாக்காளர் படிவங்களை வழங்க 8 நாட்களே போதும். முதிர்ந்த அரசியல்வாதிகள் மக்கள் பிரச்னை குறித்து பேச வேண்டும். திமுக தலைவர், உதயநிதி எங்கள் ஆட்சி குறித்து குறை சொல்ல முடிந்ததா? அதிமுக, பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்.

வேடிக்கையான அரசு

அதிமுக, பாஜ., கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக தான் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதனை அகற்ற வேண்டும் என்ற கொந்தளிப்பு உடன் தான் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் முதல்வர், நிதி ஒதுக்காமல் பல திட்டங்களை அறிவிக்கிறார்.இப்படி ஒரு வேடிக்கையான அரசு இந்தியாவிலேயே எங்கேயும் கிடையாது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Uthamarseeli Kattanthadi
நவ 10, 2025 17:00

Article 356, ஏன் பயன்படுத்தக்கூடாது?. அரசை உடனே கலைக்கவேண்டும் என்று பரிந்துறைக்கலாமே. எதிர் கட்சியினர்.


சொல்லின் செல்வன்
நவ 10, 2025 16:35

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு... பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்தது உங்கள் ஆட்சியில்தானே ஐயா.. அதற்காக இப்போது நடைபெறும் ஆட்சியில் மும்மாரி பொழிகிறது என்று கூறவில்லை. நீங்கள் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது..


kjpkh
நவ 10, 2025 17:32

அதற்குத்தான் மக்கள் அவரை ஆட்சியில் இருந்து இறக்கி விட்டு திமுகவை ஆட்சியில் உட்கார வைத்து இருக்கிறார்கள்.பழனிச்சாமி மாதிரி ஸ்டாலினும் இருக்கிறார் என்றால் திமுக ஆட்சி எதற்கு.எதிர் கட்சி தலைவர் கேட்டால் சரியான பதில் வராது.உங்கள் ஆட்சியில் நடக்க வில்லையா என்று கேட்பதுசரியான பதில் இல்லை.. பதில் சொல்ல முடியாமல் முட்டு கொடுத்து சமாளிப்பது.


Vasan
நவ 10, 2025 16:20

ஆம், 2016-21 இல் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது.


T.sthivinayagam
நவ 10, 2025 14:04

அண்ணாமலை சாரை வீட்டு அனுப்பி விட்டு, இப்போது பழனிச்சாமி சார் அவரை போலவே பேச ஆரம்பித்து விட்டார் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.


Vasan
நவ 10, 2025 14:02

Jayalalithaa never considered EPS as CM candidate. Whenever she had to go on leave, she handed over the mantle to OPS only. What EPS did and doing now, is betrayal to Jayalalithaa.


Senthoora
நவ 10, 2025 13:09

உங்களுடைய கூண்பாண்டி ஆட்சிக்காலத்தைவிட பரவாய் இல்லை.


Kadaparai Mani
நவ 10, 2025 14:09

AIADMK rule always better than DMK rule. Edappadi ruled better than stalin


S.L.Narasimman
நவ 10, 2025 13:09

வேகமா சுரண்டுவார்களே ஒழிய தமிழ்நாடு வளர உழைக்க மாட்டாங்கெ.


V Venkatachalam, Chennai-87
நவ 10, 2025 15:54

சாராய யாவாரியை இப்புடி போட்டு தாக்க கூடாது. ஏதோ தான் உண்டு தன் டோபா உண்டு ன்னு எழுதி குடுக்குற பேப்பரை பாத்து படிச்சுட்டு இட்லி கடை படம் மாதிரி ஏதாவது பணம் தேத்துவதற்கு படம் இருந்தா அதை பாத்துட்டு இருக்கார்.


Ahamed
நவ 10, 2025 12:53

மிக சரியாக சொன்னார் எதிர்கால முதல்அமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள்... தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது... ஸ்டாலின் பதவி விலக வேண்டும்...


Raja k
நவ 10, 2025 12:50

தங்களின் அடிமை அரசு அடுத்தாண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் ஒரு பாலியல் கொடுமைகூட நடக்காது, அப்படிதானே? உங்களால் உறுதி கொடுக்க முடியுமா?


திகழ்ஓவியன்
நவ 10, 2025 12:35

பார்த்தவுடன் காதல் என்று இனி இந்த மாதிரி எல்லாம் சகஜம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை