உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி

இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ரொம்ப வருத்தமான விஷயம். ஆண்டவன் அருளால் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாதுனு வேண்டிக்குறேன்'' என ஆமதாபாத் விமான விபத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.குஜராத்தின், ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகியும், சிதைந்தும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக, டி.என்.ஏ., எனப்படும் மரபணு மாதிரி எடுக்கப்பட்டது.

அடையாளம்

விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் மருத்துவக் கல்லுாரி விடுதியில் இருந்தவர்கள் என, 250 பேரின் உறவினர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில், 99 பேரின் உடல்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், 64 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ன.

வருத்தமாக இருக்கிறது

இந்நிலையில், இன்று (ஜூன் 17) சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினி கூறியதாவது: ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம். ரொம்ப மிக மிக வருத்தமாக இருக்கிறது. ஆண்டவன் அருளால் இனி அப்படி நடக்கக் கூடாதுனு வேண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

புரொடஸ்டர்
ஜூன் 18, 2025 09:04

பிரதம மந்திரியாக இருந்தால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது ரஜினிகாந்த்.


R.Venkatraman
ஜூன் 17, 2025 21:57

கமல் தமிலிருந்து கன்னடம் வந்தது என்று சொன்னதற்கு என்ன சொல்லப்போறார் ? பதுங்கி விட்டார் வேட்டையன் ?


Selvaraj K
ஜூன் 17, 2025 21:40

நாட்டுக்கு தேவை இல்லாத ஆணி


venugopal s
ஜூன் 17, 2025 21:21

நாட்டை ஆள்பவர்கள் கையாலாகாதவர்களாக இருந்தால் கடவுளைத் தான் நம்பி இருக்க வேண்டும்!


அப்பாவி
ஜூன் 17, 2025 16:42

இதுவரை இதுமாதிரி பத்து சம்பவங்கள் நடந்தாச்சு. அப்பவெல்லாம் வேண்டிக்கலையா?


Oviya Vijay
ஜூன் 17, 2025 15:59

பெருசா குறை சொல்ல வந்துட்டாங்க...இவரு இப்பவாவது வருத்தம் தெரிவிக்கிறார்...ஆனால், நமது விடியல் முதல்வர், சின்ன தத்தி, டார்ச் லைட் கமல்...ஆகியோர் இன்னமும் ஆறுதல் சொல்ல வில்லை..இதுதான் சமூக நீதியோ....


Rajan A
ஜூன் 17, 2025 15:57

இது அவசிய செய்திதானா? சும்மா அவர்க்கிட்டே கருத்து கேட்டு எங்களை தொல்லை பண்ணாதிங்க


கல்யாணராமன்
ஜூன் 17, 2025 14:08

இப்போதுதான் விழித்து எழுந்துள்ளார்.


Ramesh Sargam
ஜூன் 17, 2025 13:26

விபத்து நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இப்பத்தான் இவருக்கு அதைப்பற்றி கருத்து தெரிவிக்க நேரம் கிடைத்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை.


Raja k
ஜூன் 17, 2025 12:19

வந்துட்டாரு கருத்து கந்தசாமி, இவ்வளவு நாளா கோமாவுல இருந்தாரா? இப்போ வந்து யாருகேட்டா உங்கள் இரங்கலை,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை