உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக கட்டணம் வசூலித்தால் நிர்ணய குழுவிடம் புகார் சொல்லலாமே!

அதிக கட்டணம் வசூலித்தால் நிர்ணய குழுவிடம் புகார் சொல்லலாமே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தனியார் மருத்துவமனைகளில், கணக்கில் வராத வகையில் 3.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவது குறித்து, கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, எந்த கணக்கிலும் வராத வகையில், 3.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, நம் நாளிதழில் நேற்று வெளியான செய்தி குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் கட்டணம் நிர்ணயம் செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மற்றும் அண்ணா பல்கலை துணை வேந்தர்கள், மக்கள் நல்வாழ்வு துறை செயலர், மருத்துவ கல்வி இயக்குனர் அடங்கிய கட்டண நிர்ணய குழு செயல்பட்டு வருகிறது.இந்த குழு தான், ஆண்டுதோறும் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. அதேநேரம், விடுதி, பஸ் கட்டணத்தை, அக்கல்லுாரிகளே நிர்ணயித்து கொள்ளலாம்.இந்தாண்டு மருத்துவ கல்வி கட்டணத்தை உயர்த்தும்படி, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் கோரிக்கை வைத்தன. அதை கட்டண நிர்ணய குழு நிராகரித்து விட்டது.தற்போது, 3.5 லட்சம் ரூபாய் வசூலிக்கும் செய்தி தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதிக கட்டணம் வசூலிப்பதாக இரண்டு புகார்கள் வந்துள்ளன. அவை, கட்டண நிர்ணய குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள், கட்டண நிர்ணய குழுவிடம் புகார் அளிக்கலாம். இந்த அரசு பொறுப்பேற்ற பின், மாணவர் சேர்க்கை, பணியிட மாறுதல் என, அனைத்தும் நேர்மையான முறையில் நடந்து வருகிறது.யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், புகார் தெரிவித்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Lion Drsekar
அக் 11, 2024 12:17

காவலர்கள் உங்கள் நண்பன் எவ்வளவு அழகான மனதிற்கு குளிரான வார்த்தை, இதைக்கேட்டால் பல தலைமுறைக்கு மகிழ்ச்சி ஆனால் நிஜ வாழ்வில் பொது இடங்களில் சிலர் எந்த பதவியில் இருந்தாலும் ஒருமையில் திட்டுவது, வானங்களில் மறித்து அவர்கள் கேட்கும் , பேசும் , நடந்து கொள்ளும் விதம், noparking இல் வாகனங்கள் மிக அதிக அளவில் நிறுத்தும் வரை காத்திருந்து அவர்கள் வாகங்களில் இருசக்கர வானங்களை ஏற்றிச் என்று, அபராதம் விதித்த, நான்கு சக்கர வாகங்களுக்கு போட்டுப்போட்டு அபராதம் விதிப்பது , இவைகளை ல்லாம் பார்த்தல் , அரசு தானாக முன்வந்து அப்படி எல்லாம் செய்யாதீர்கள் அங்கங்கு கூட்டம் கூட்டமாக நின்று வானங்களை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தாமல் , நிறுத்தும்போதே அவர்களை ப்புறப்படுத்தினால் உண்மையிலே நண்பர்கள் அல்ல தெய்வங்கள், அதே போன்று எல்லோருக்கும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள முன்னுதாரணமாக நடந்துகொள்ள வழிமுறைகள், இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள், அதே நேரத்தில் பிரசவ ஆஸ்ப்பிடிர்ஹி முதல் சுடுகாடு வரை வாங்கப்படும் லஞ்சத்துக்கும் இதே நிலைதான் , இவைகள் அனைத்துமே , எல்லா இடங்களிலும் லஞ்சம் வாங்குபவர்கள் மேல் அதிகாரியை சுட்டிக்காட்டுகிறார்கள் இது எப்படி என்றால், மாமன்னர்கள் இடத்தில வேறு ஒரு ஆட்சியாளர் அதாவது உண்மையான மக்கள் பிரநிதிகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும்போது குறுநில மன்னர்களால் தன்னிச்சையாக செயல்படமுடியாத போது அவர்கள் பேசுவது, மழைக்கு , இந்த அக்கட்சிதான் காரணம், பஞ்சத்துக்கு இந்தக்கட்சிதாங்க காரணம் என்று எல்லாவற்றிக்கும் அவர்கள் மீதுப்பழி பொதுவது போல், எல்லாவற்றிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்துக்கொண்டு இருக்க முடியாது அப்படி கொடுத்தால் அவர்களும் ஜாதியின் பெயரில் அடையாளம் கண்டு அதற்க்கு தகுந்தாற்போல் எல்லாமே , இன்று து நீதிமன்றம் வரை சென்றுவிட்டது , எந்த ஆட்சி வந்தாலும் லஞ்சம் தொகை கணிசமாக ஏறிக்கொண்டேதான் போகிறது, ஆகவே கவிஞர்கள் கூறியது போல் , பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ திருடாதே பாப்பா திருடாதே, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது, சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஓழிக்க முடியாது திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஓழிக்க முடியாது, கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது, இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்குற வேலையும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது, உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா - - - கெடுக்குற நோக்கம் வளராது. என்ன பாடினாலும் ,இவர்கள் திருந்தினால் , மன்னன் எவ்வழியோ அவ்வழியினுள் மக்கள் இருப்பார்கள் , வந்தே மாதரம்


S. Neelakanta Pillai
அக் 10, 2024 19:54

எதிர் முகாமில் என்ன நடக்கிறது என்பதை தனது ஆட்சி அதிகாரத்தில் வேவு பாக்க தெரிந்த இந்த அரசு நிர்வாகத்திற்கு சட்டத்துக்கு புறம்பாக மக்களிடம் இருந்து எவ்வளவு லஞ்சம் வசூல் ஆகிறது என்பது கண்டுபிடிக்க தெரியாதா... அந்த அளவிற்கு திறமையற்றவர்கள் தான் இவர்களைச் சுற்றி பணியமர்த்தப்பட்டு இருக்கிறதா. என்ன பதில், விளக்ககுமாத்துக்கு பட்டுக் குஞ்சலம் சுத்தியது போல சகிக்கவில்லை


கூமூட்டை
அக் 10, 2024 12:58

இது தான் கூமூட்டை திராவிட மாடல் நீட் வேண்டாம் என்று கூப்பாடு


ஆரூர் ரங்
அக் 10, 2024 12:39

புகார் சொன்னா வீட்டுக்கு ஆட்டோ வரும்.


PADMANABHAN R
அக் 10, 2024 10:29

திராவிட மாடல் ஆட்சியில் நேர்மை. உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா அமைச்சரே?


Kumar Kumzi
அக் 10, 2024 10:10

வசூலிக்கப்படும் பணத்தில் உனது எஜமானுக்கு பங்கு உண்டு தானே அப்புறம் எப்படி புகாரளிப்பது ஹீஹீஹீ


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 10, 2024 09:55

அரசின் தப்பு பற்றி புகார் அளித்தால், அளிப்பவர் கண்டிப்பாக சுளுக்கெடுக்கப்படுவார். அதுதான் திராவிடிய மாடல்.


karunamoorthi Karuna
அக் 10, 2024 08:59

திமுக அரசு பதவி ஏற்ற பிறகு நேர்மையான முறையில் அனைத்தும் நடக்கிறது டாஸ்மாக் சாராயம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூட நேர்மையான முறையில் தான் வசூல் செய்தது


raja
அக் 10, 2024 08:31

மானவர் சேர்க்கை நேர்மையான முறையில்... அதாவது பிரைவேட் கல்லூரிகள் முழுவதும் அட்மிஷன் முடித்த பிறகு அரசு கல்லூரிகளின் அட்மிஷன் துவங்கியது... அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில் சில மானவற்களின் பெற்றோர்கள் முன்பணமாக பல லட்சங்கள் கொடுத்து துண்டு போட்டு வைத்த பிறகு அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் அந்த துண்டு போட்ட பல லட்சம் திருப்பி தராத வையில் பல கோடி கல்வி வள்ளல் களுக்கு வருமானம் ஏற்படுத்தி கொடுத்த து இந்த திருட்டு திராவிட இங்கொள் கோவால் புற தெலுங்கன் அரசு.. புரிந்து கொண்டாயோ தமிழா...


தத்வமசி
அக் 10, 2024 08:14

தங்களுக்கு வேண்டாத கல்வி நிறுவனங்களில் கலக்கம் செய்ய நல்ல தீர்ப்பு.


முக்கிய வீடியோ