உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத குவாரி விவகாரம்; 3500 கோடி ரூபாய் உடனே செலுத்தணும்; 6 நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சட்டவிரோத குவாரி விவகாரம்; 3500 கோடி ரூபாய் உடனே செலுத்தணும்; 6 நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்த குவாரி நிறுவனங்கள், 3500 கோடி ரூபாய் உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்து வரும் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அப்போதைய அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ, அமிகஸ் க்யூரி ஆக வக்கீல் சுரேஷ் நியமிக்கப்பட்டார்.இந்த குழுக்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டன. முடிவில், சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நீதிபதி ஜோதிராமன் அமர்வில் விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. ஆய்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட தாது மணல் ஆலைகள் மூடப்பட்டன. இந்த சூழலில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்த 6 நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கனிமத்தை எடுத்து விற்பனை செய்ததற்காக மொத்தம் 3500 கோடி ரூபாய், அரசுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.அதில், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 முதல் 2014 வரை நெல்லை மாவட்டத்தில் 27 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாகவும், அதற்கான ராயல்டி மற்றும் கனிமவள கட்டணமாக ரூ.2,195 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட மணல் 33.62 லட்சம் டன் என்று அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்திலும், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிமங்களுக்கான தொகையை குவாரி உரிமையாளர்களிடம் வசூலிப்பதற்கு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

JeevaKiran
ஜன 23, 2025 01:06

14 வருசமாக சட்ட விரோதமா கனிமவள கொள்ளை . 14 வருசமா அரசாங்கம் தூங்கினா இருந்திச்சி


theruvasagan
ஜன 22, 2025 22:21

கனிம வளம் என்ன தமிழகத்தையே விற்றால் கூட அபராதம் கட்டினால் போதும். வழக்கு தண்டனை எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது. அவ்வளவு அருமையான சட்டங்கள்.


Tetra
ஜன 22, 2025 21:01

சிரிப்புத்தான் வருகுதய்யா


sankaranarayanan
ஜன 22, 2025 20:56

எதோ கதை கந்தலாகி முடிந்துவிட்டது இது வெறும் பங்காளிகள் சண்டை அய்யா விரைவிலேயே பங்காளிகள் இரு திராவிட கட்சிகளும் சமாதானம் ஆகிவிடுவார்கள் கொடுக்கல் வாங்கலில் சற்றே முரண்பாடு அவ்வளவேதான் நீதி மன்றமே இவர்களை கடைசியில் மன்னித்து விடுவார்கள் இதுதானய்யா நடப்பு


M Ramachandran
ஜன 22, 2025 17:23

அடித்ததோ பல்லாயிரம் கோட்டி கட்ட சொல்வது மிக சிறுசா காட்ட சொல்லுது. அப்போது திருடன் ஒரு 1500 பவுன் தங்கம் திருடி விட்டு மௌனம் சாதித்தால் சில பவுனை மட்டும் திருப்பி கோடு என்பது போல் இருக்கு.


MUTHU
ஜன 22, 2025 17:21

என்னடா இது திராவிட நாட்டுக்கு சோதனை. ஒருபக்கம் கவர்னர். இன்னொரு பக்கம் நீதிபதி. இவர்கள் எல்லாம் ஏன் மக்கள் தேர்ந்தெடுத்த எங்களின் நிர்வாகத்தினை ஏன் சோதிக்கின்றனர். போலீசை நாங்களே நியமிக்கின்றோம். ஜட்ஜ் எல்லாம் நாங்கள் நியமிக்க முடியாதா. முதலில் சட்டசபையில் இதற்கான தீர்மானம் இயற்ற வேண்டும்.


prabhu
ஜன 22, 2025 17:04

சேனல் இந்த நியூஸ் போடுமா


G Mahalingam
ஜன 22, 2025 16:45

30000 கோடி சம்பாலித்து இருப்பார்கள். ஆனால் கோர்ட் வாயை மூட 3500 கோடி அபராதம் விதித்து உள்ளனர். அதுவே மணல் திருடர்களை கேட்டு விட்டுதான் அபராதம் விதித்து இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் திமுக அடிமைகள் ‌


R SRINIVASAN
ஜன 22, 2025 16:39

வ்வ் மினெரல்ஸ் மீது ஏற்கனவே நோட்டீஸ் பிறப்பித்து ஏதும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கப்பட இல்லை


V வைகுண்டேஸ்வரன்
ஜன 22, 2025 16:23

தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கை சூப்பர். பாராட்டுக்கள். அந்த 6 நிறுவனங்களின் பெயர்களையும் போட்டிருக்கலாம். விடாமல் follow up பண்ணி 3500 கோடி யையும் வசூலித்து விடுங்கள். நன்றி


Tetra
ஜன 22, 2025 21:03

ஆஹா என்னே ஒரு கருத்து. நபியின் நாணயம் மெய் சிலிர்க்க வைக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை