உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசாரணைக்கைதி மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

விசாரணைக்கைதி மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''விசாரணை கைதி மரணம் பற்றி தகவல் அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழக வரலாற்றில் முக்கியமான நாளாக இன்றைய நாள் அமைய போகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தி.மு.க., சார்பில் தொடங்கி வைத்துள்ளேன். இன்று முதல் 45 நாட்கள் ஓரணியில் முன்னெடுப்பு நடைபெறுகிறது. மண், மொழி, மானம்ஜூலை 3ம் தேதி தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வினர் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளில் சென்று சந்திக்க உள்ளனர். தமிழகத்தில் மண், மொழி, மானம் காக்க மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம். மத்திய பா.ஜ., அரசால் தமிழகம், தமிழ் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஹிந்தி திணிப்பு

அறிவியல், பண்பாடு, மொழி என எல்லாவற்றிலும் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் இருந்து வசூலிக்கப்படும் வரியை தமிழகத்தின் வளர்ச்சிக்கு தருவதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி தருவதில்லை. தேசிய கல்விக் கொள்கை ஹிந்தி திணிப்பு கொள்கையாக மட்டுமே உள்ளது.

நிதி தருவதில்லை

தமிழரின் வரலாற்று பெருமை கீழடி அறிக்கையை வெளியிடவில்லை மத்திய அரசு. நம் முன் வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் தமிழகத்தின் உரிமை பிரச்னை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைவர் வீட்டிலும் சென்று சந்திக்க உள்ளோம். தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்களை மத்திய அரசு தரவில்லை. கல்விக்கான நிதியை மத்திய அரசு தருவதில்லை.

சட்டசபை தேர்தல்

தமிழகத்தின் எம்.பி., தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. தமிழகத்தை எப்படி எல்லாம் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., தயாராக உள்ளது. தயாராகி நீண்ட நாட்களாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி இப்போது தான் மக்களை சந்திக்க போகிறார்.

நடவடிக்கை

நாங்கள் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறோம். லாக் அப் மரணம் பற்றி தகவல் அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

41 லட்சம் மாணவர்கள்

முன்னதாக, சென்னையில் வெற்றி நிச்சயம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் உன்னதமான உயர்கல்வி. இந்தியாவிலேயே வளர்ச்சி பாதையில் தமிழகம் முதலிடம். நான் முதல்வன் திட்டம் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டம் மூலம், மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் பயன் பெற்று வருகின்றனர்.

எனது வெற்றி

மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள், இளைஞர்களின் வெற்றியே எனது வெற்றி. மாணவர்களின் வெற்றி தான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி. வெற்றியை நோக்கி தான் வாழ்க்கையில் எல்லோரும் செல்கிறோம். மாணவர்களுக்கான வெற்றிப் படிக்கட்டுகளை அமைக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Vel1954 Palani
ஜூலை 11, 2025 16:59

அரசு தார்மிக பொறுப்பெடுத்து , அஜித் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் அல்லது அஜித்தை கொன்ற காவலர்களின் சம்பளம் பணிக்கொடை முழுவதையும் பிடித்து அஜித் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் . அரசு முன் வருமா?


Vel1954 Palani
ஜூலை 11, 2025 16:51

திருபுவனம் அஜித் விசாரணை கைதியா ? லாக் கப் மரணம் . சஸ்பெண்ட் பண்ணுவது தான் நடவடிக்கையா?


surya krishna
ஜூலை 02, 2025 09:01

don't talk about the central government. tamilnadu people voted for your party. but you are not doing anything well......


Padmasridharan
ஜூலை 02, 2025 08:27

இத்தனைக்கு அந்த நகைகள் எங்கே போயின. வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் செய்யும் அக்கிரமங்களும் காவலர்களுடன் சேர்ந்து உள்ளூர் மக்களை கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டனர். மானம் போகிற மாதிரிதான் பல காவலர்களும் மக்களை மிரட்டியடித்து பணத்தை புடுங்குகின்றனர்.


venugopal s
ஜூலை 02, 2025 06:08

ஒரு மாநில அரசு என்னென்ன நியாயமான மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவைகளை தமிழக அரசு இந்த விவகாரத்தில் எடுத்து உள்ளது பாராட்டுக்குரியது. இனி சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். அது சரி அந்த நான்கு பஹல்காம் தீவிரவாதிகளை கண்டு பிடித்து விட்டார்களா?


vbs manian
ஜூலை 01, 2025 21:57

அண்ணா பல்கலை விவகாரத்திலும் உடன் நடவடிக்கை என்று சொன்னார்கள்.


Ramesh Sargam
ஜூலை 01, 2025 20:29

என்ன நடவடிக்கை தெரியுமா? இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து பேரம் பேசி இருக்கிறார் திமுக அமைச்சர் ஒருவர் முதல்வரின் கட்டளையின் பேரில். அதுதான் நடவடிக்கையா?


திகழ்ஓவியன்
ஜூலை 01, 2025 23:05

இவர்கள் ஆவது பேரம் பேசினார் அனால் ஒருத்தர் ஒரு கோடி தருவேன் என்று ஓபன் STATEMENT கொடுத்தார் , என்ன ஆச்சு சிபிஐ ரிசல்ட் உம வந்து விட்டது


Balasubramanyan
ஜூலை 01, 2025 20:01

If anybody says what is Nan mudhalvan Thittam. how our teachers and professors got benefitted. Will anybody explain. So our teachers know the recent advancement in their subject advancement in science.pl. Teach students moral values of life and they can be good and respectful citizens of country.next why the students in govt schools are denied to learn extra language. New education policy never said imposition of Hindi. But rich persons,politicians,bureaucrats sons and daughters study in private schools which teaches Hindi by getting lakhs of rupees as fees. These politicians are the owners of these schools. They send their children to foreign countries or higher studies. They’re best colleges teaching the same subject in India and TamilNadu.some settled in other states to facilitate thei children to know Hindi and the local language.But they cry Hindi imposition in TamilNadu .they conveniently settled in other state where Hindi is common language o comunication.Sorry . Pl. change you attitude. Pl provide opportunities to all whethe they are rich or poo.As an educationist this is my humble request to education minister.and chie minister.


Kjp
ஜூலை 01, 2025 18:43

சாத்தான் குளம் கொலை வழக்கில் அவியல் செய்யும்போது இன்றைய முதல்வருக்கு அன்று குளு குளு என்று இருந்ததா?


nagendhiran
ஜூலை 01, 2025 17:45

விடுங்க விடியல் முதல்வரே? எங்களுக்கு எடப்பாடி ஆட்சியில் நடந்திருந்தாதான் பிரச்சனை? இப்போ நடந்தது நம்ம விடியல் ஆட்சியில்"தானே? அதனால்"கடந்து போய்டுவோம்? விவாதம் எல்லாம் நடத்த மாட்டோம் விடுங்க முதல்வரே? பச்சை? தமிழன்?


புதிய வீடியோ