வெள்ளத்தடுப்பு நடவடிக்கை இல்லாததால் பாதிப்பு
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் இதுநாள் வரை பேரிடர் மேலாண்மை கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் தமிழகத்தில் கண்மாய்கள் துார் வாரப்படாமல் வாறுகால்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இது தமிழக அரசின் அவல நிலையை காட்டுகிறது. இதன் வாயிலாக, மழை காலங்களில், வழக்கமான நீரைக் காட்டிலும் கிடைக்கும் உபரி நீர், விவசாய விளை நிலங்களில் புகுந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் சிந்தும் நிலையில் தான் உள்ளனர். பருவ மழை காலத்தில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் மேலும் பாதிக்கப்படுவர். ஆனால், அதுகுறித்தெல்லாம் முதல்வர் ஸ்டாலினோ, அமைச்சரவை சகாக்களோ யாரும் கவலைப்படுவதுமில்லை; கண்டு கொள்வதுமில்லை. தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் சர்வாதிகார ஆட்சி தான் தற்போது நடக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உதயகுமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,