உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பு ஏன்; அண்ணாமலை கேள்வி

அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பு ஏன்; அண்ணாமலை கேள்வி

சென்னை: 'கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டாக்டர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய டாக்டர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன.

கூச்சமாக இல்லையா?

நான்கு ஆண்டுகளாக, டாக்டர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? டாக்டர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளைத் தொடர்ந்து பறி கொடுத்து வருகிறோம்? இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இன்றிப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு? இத்தனை கையாலாகாத அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா?

தோல்வி

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, தி.மு.க., கட்சியிலிருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, தி.மு.க., அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? தி.மு.க., கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகிவிடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை? இந்தக் கையாலாகாத தி.மு.க., அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ES
பிப் 14, 2025 16:00

This happened in other states too he ready to talk about it? None of these people care about people zero


V வைகுண்டேஸ்வரன்
பிப் 14, 2025 14:13

என்ன பண்ணறது? இது தான் உன் விதி. பொழச்சு போ


guna
பிப் 14, 2025 16:13

ஒரு த்ரவிடனின் கடைசி ஈனஸ்வரம் கேட்கிறது.....மகிழ்ச்சி...


KavikumarRam
பிப் 14, 2025 16:47

உன் வீட்ல எதாவது எழவு விழுந்தா இப்படித்தான் விதின்னு போயிருவியா???


guna
பிப் 14, 2025 17:53

அதுக்கு இது பதில் இல்லயே 29% அறிவாளி


T.sthivinayagam
பிப் 14, 2025 14:00

நல்ல கேள்வி ஆனால் கேட்க வேண்டிய மாநிலம் வேறு


சில்வியா
பிப் 14, 2025 13:40

அது அவிங்களைத்தான் கேக்கணும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 14, 2025 12:23

அவரவர் விதிப்படி தான் இறப்பு.


Mettai* Tamil
பிப் 14, 2025 13:01

அவரவர் விதிப்படி தான் 200, 2000, 20000, 200000 .......


Ramesh Sargam
பிப் 14, 2025 13:10

தவறு. அரசு மருத்துவமனைகளில் ஏட்படும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமே அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அஜாக்கிரதைதான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 14:41

பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்தாலுமா ??


Kumar
பிப் 14, 2025 11:58

மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு வாங்கி கூடுங்கள் அண்ணாமலை அதை பற்ற பேசுங்கள் உங்களுக்கு வெக்கமாக இல்லையா


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 13:12

கொள்ளையடித்துவிட்டு மேலும் மேலும் நிதி கேட்பவர்களே வெட்கப்படாதபொழுது .......


Mettai* Tamil
பிப் 14, 2025 13:13

ஊழல் நதிக்கு ...இன்னும் வேண்டுமாம் நிதி ....


guna
பிப் 14, 2025 14:30

எதுக்கு வெட்கம்...


தமிழ்வேள்
பிப் 14, 2025 16:11

மத்திய அரசின் கஜானாவையே தூக்கி கொடுத்தாலும் , திமுகவின் திருட்டு கும்பலுக்கு ஆட்டையை போடா போதாது தான் ....அதற்காக என்ன அமெரிக்க அரசின் நிதியையா கேட்கமுடியும் ? அதெப்படிடா , உலகின் அத்தனை திருட்டு பயல்களும் திமுக என்ற ஒரே திருட்டு கட்சியில் வந்து சேர்ந்துள்ளீர்கள் ?


sridhar
பிப் 14, 2025 16:28

ஏன் , இன்னும் இலவச ஆயிரங்களை அள்ளி வீசி தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கவா .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை