உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியா சிமென்ட்ஸ் ஆபீசில் ரெய்டு

இந்தியா சிமென்ட்ஸ் ஆபீசில் ரெய்டு

சென்னை:அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை, ஆர்.ஏ.புரத்தில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இதன் தலைவராக ஸ்ரீனிவாசன் உள்ளார். இந்நிறுவனம், கிரிக்கெட் அணியை ஏலம் எடுத்து போட்டிகளை நடத்தி வருகிறது.இந்நிலையில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 'அமலாக்கத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அவர்கள் கேட்ட ஆவணங்களையும் வழங்கினோம். தேசிய பங்குச் சந்தை நிறுவனமும் விளக்கம் கேட்டது. அதற்கும் பதில் அளித்து உள்ளோம்' என, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் சார்பிலும் அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி