உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் எல்லையில் கூட்டு ரோந்து இந்தியா - இலங்கை ஆலோசனை

கடல் எல்லையில் கூட்டு ரோந்து இந்தியா - இலங்கை ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம் : இந்தியா - இலங்கை இடையே தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்கிறது. இருநாடுகளின் கடற்பகுதியும் குறைந்த துாரத்தில் இருப்பதால், சட்ட விரோதமாக போதை பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இரு தரப்பு கடற்படை, கடலோர காவல் படையினரும் இவற்றை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், இந்திய கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் பரமேஷ் சிவமணியும், இலங்கை கடற்படை வைஸ் அட்மிரல் பிரியந்தா பெரைரா ஆகியோர் சந்திப்பு கொழும்புவில் நடந்தது. இதில், இரு நாடுகளின் கடல் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது. கடல் பகுதியில் நடக்கும் கடத்தல், குற்றச் செயல்களை தடுப்பது குறித்து இரு நாட்டு வீரர்கள் அடங்கிய கூட்டு ரோந்து எல்லைப்பகுதியில் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ramesh
நவ 14, 2024 11:01

இது வரையிலும் இலங்கை காவல் படையினர் தான் இந்தியா மீனவர்களை பிடித்து கொண்டு சென்றார்கள் என்று செய்தி வருகிறது. நம் மீனவர்கள் அல்லது கடலோர காவல் படி இணர் மீது தவறா என்று நமக்கு தெரிய வில்லை .இதற்க்கு ஒரு முடிவு தெரிய வேண்டும் என்றால் இலங்கை படையினரை போன்றே அந்த நாட்டு மீனவர்களையும் படகையும் கைப்பற்றி வந்து ஜெயிலில் அடைத்து அவர்களை போலவே கடுமையான அபராதம் மற்றும் படகை ஏலம் விடுவது போன்ற நடவடிக்கை இல் ஈடு பட்டால் மட்டுமே இதற்க்கு ஒரு முடிவு கிடைக்கும் . இந்த மாதிரி நடவடிக்கைக்கு அடிக்கு அடி உதைக்கு உதை என்பதே சரி . இந்தியா அரசின் மென்மையான போக்கு மிகவும் தவறானது


ஜெகதீஸ்வரன் தண்டபானி
நவ 14, 2024 12:56

நம் நாடு மீன்கள் வளத்தை தமிழக மீனவர்கள் மடி சுருக்கு வலைகளை பயன்படுத்தி அழித்து விட்டார்களே? இங்கே எதற்கு இலங்கை தமிழ் மீனவர்கள் வரப்போகிறார்கள்? மீன் பிடிக்க போகிறார்கள்?


கருப்பையா,மண்டபம்
நவ 14, 2024 19:20

இலச்கையில் மீன்வளம் அதிகம் எனவே அவர்கள் ஏன் இங்கே வரணும்? அந்நாட்டு மீனவர்களை பிடிக்கணும்னா இலங்கைக்கு போய்தான் பிடிச்சுட்டு வரணும்.


Thirumal Kumaresan
நவ 14, 2024 09:35

தமிழக மீனவர் பிரச்சனை முடிவுக்கு வர இருநாட்டு வீரர்கள் இணைந்த ரோந்து நல்ல முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்


Vivekanandan Mahalingam
நவ 14, 2024 09:28

நல்ல முயற்சி - உடனடியாக செய்ய வேண்டும் கடத்தலில் ஈடுபடும் மீனவர்களை இந்திய ராணுவம் தண்டிக்க வேண்டும்


Vivekanandan Mahalingam
நவ 14, 2024 09:28

நல்ல முயற்சி - உடனடியாக செய்ய வேண்டும் கடத்தலில் ஈடுபடும் மீனவர்களை இந்திய ராணுவம் தண்டிக்க வேண்டும்


புதிய வீடியோ