உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்; பிரதமர் மோடி

இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்; பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலக நலனுக்காக இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய ராஜதந்திர கூட்டாண்மையின் தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். உலக நலனுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !