வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ravi subramanian
ஏப் 20, 2026 06:48
Too late.
சென்னை: தமிழக காவல் துறையில் உளவுத்துறை ஐ.ஜி.,யாக செந்தில்வேலன் இருந்தார். தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அக்கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகளை, ஊடகங்கள் வழியே பரப்பியதாக புகார் எழுந்தது. அவரை மாற்ற வேண்டும் என, பா.ஜ., தரப்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, செந்தில்வேலன், உளவுத்துறை ஐ.ஜி., பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக, போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி., அவினாஷ்குமார், புதிய உளவுத்துறை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அவர் பொறுப்பேற்றார்.
Too late.