உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவில் இன்ஜி., படிப்புக்கு குறையும் ஆர்வம்; பாடப்பிரிவை சரண்டர் செய்யும் கல்லுாரிகள்

சிவில் இன்ஜி., படிப்புக்கு குறையும் ஆர்வம்; பாடப்பிரிவை சரண்டர் செய்யும் கல்லுாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் -இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகரிக்கும் அதே நேரத்தில், 'சிவில்' பாடப்பிரிவை தேர்வு செய்வதில் மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் பல தனியார் கல்லுாரிகள், அந்த பாடப்பிரிவை சரண்டர் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில், 433 கல்லுாரிகளில், 2.33 லட்சம் பொறியியல் படிப்பு இடங்களுக்கு சேர்க்கை நடத்த அண்ணா பல்கலை அனுமதித்தது. கலந்தாய்வில், 1.79 லட்சம் இடங்களை நிரப்ப ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 1.20 லட்சம் இடங்கள் மட்டும் நிரப்பப்பட்டன.இதில், 29 கல்லுாரிகளில் மட்டும், 100 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டன. 81 கல்லுாரிகளில், 25 சதவீதம் கூட நிரம்பாமல் இருந்தன. குறிப்பாக, 'சிவில்' பாடப்பிரிவை தேர்வு செய்த மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.கடந்த ஆண்டு கலந்தாய்வில், 4,451 மாணவர்கள் மட்டும் சிவில் பாடப்பிரிவை தேர்வு செய்தனர். கணினி படிப்பில் சேர, 170க்கும் மேல், 'கட் ஆப்' வேண்டும் என்ற நிலையில் உள்ள கல்லுாரிகளில் கூட, சிவில் பாடப்பிரிவு கலந்தாய்வு இடங்கள் நிரம்பவில்லை.நிர்வாக ஒதுக்கீட்டில் சிவில் சேர விரும்புவோர் எண்ணிக்கை, இதைவிட அரிதாக உள்ளது. நடப்பு கல்வியாண்டில் பெரும்பாலான கல்லுாரிகளில், கணினி அறிவியல் சார்ந்த பிரிவுகளுக்கு நிர்வாக ஒதுக்கீடு நிரம்பிய நிலையில், 'சிவில்' கேட்பாரற்ற நிலையில் உள்ளது. இதனால், முன்னணி கல்லுாரிகள் கூட, சிவில் பாடப்பிரிவை, சரண்டர் செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளன.தனியார் கல்லுாரி டீன் ஒருவர் கூறியதாவது: கணினி அறிவியல் சார்ந்து, 10 பாடப்பிரிவுகள் இருந்தாலும், அவற்றில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிவில், மெக்கானிக் பாடப்பிரிவுகளுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. அதிலும், சிவில் படிக்க, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, குறைந்த கட்டணம் வசூலிக்கும் கல்லுாரிகள் கூட உள்ளன.ஆனாலும், அதில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தனியார் கல்லுாரிகள் பல, சிவில் பாடப்பிரிவை சரண்டர் செய்து, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு, கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளன.ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கணினி அறிவியல் இடங்கள் அதிகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இனி தனியார் கல்லுாரிகளில் சிவில் இருக்குமா என்பதே கேள்விக்குறி தான். ஐ.டி., வேலையை குறி வைத்தே, இன்ஜினியரிங் படிப்போரின் இலக்கு உள்ளது. சிவில் படித்தவர்களுக்கு, ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு அரிது என்பதால், அதன் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

p. y. gopalakrishnan
ஜூன் 24, 2025 16:35

In my experience, the civil engineer as a contractor agreed to build a house with one ground floor, and two houses in first floor 2bhk each and at an estimate of Rs. 70/- lakhs. while getting a contract, his talks were pleasing and he contacted us often, ie. contacted us twice in three days. But while the first floor work was over, he talked only once in fifteen days and visited for supervision once in a week without calling us. He never allowed a set of laborers continuously to work for a week in one place. There is no continuty of work force employed by him. He has not d the work with agreed proportions of cement and M sand. The cement mortar between the bricks was loose, and it can be easily fall in while scratching with a tooth brush or with a small stick. I pointed out its ratio and poor work, and he replied it will be corrected while finishing work with mortar and the combination will be adhered as per agreement i. e. 5: 1 ratio. He abruptly ran away without completing 50 percent work in first floor. He has not completed wood work ie. main door and six rooms in two floors, though he received Rs. 3/- lakhs as advance for door works. When contacted him replied that M sand and iron rod prices were escalating. and it is a loss to him, he advised us to complete the work with another Enginner. I have to finish the work with another Engineer with heavy expenditure. In total, quality suffers. So the present youth are calculating the risk. There is lack of employment chances in government sector. The private, reputed contractors expecting a minimum of three years of experience.


suresh guptha
ஜூன் 11, 2025 15:46

BECAUSE OF A I ,THE COMPUTERSCIENCE AND OTHER MAY GET DIMNISHED,WHERE AS CIVIL AND MECANICAL.WHICH IS VERY SHORTAGE IN THE INDUSTRY,ESCPECIALLY CIVIL GOT LOT OF DEMAND,INITIALLY THE MAY GET LESS BUT AT ONE STAGE THEY OVERTAKECOMPUTER PROFESSIONAL AND INTELIGENCE WILL BE HELM OF AFFAIRS


KavikumarRam
ஜூன் 11, 2025 14:00

அடுத்த ஐந்து வருடங்களில் சிவில் இன்ஜினீரிங்க்கு மாபெரும் தேவை இருக்கிறது. இப்பொழுதும் இருக்கிறது என்பதே உண்மை. அதிலும் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்கு சிவில் இன்ஜினீரிங் ஒரு வரப்பிரசாதம். முதலில் கஷ்டப்பட்டாலும் ஐந்தாறு வருடங்களில் அவர்கள் நல்ல வருமானத்தை ஈட்டுவார்கள். கட்டிடத்துறையில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்.


Diraviam s
ஜூன் 11, 2025 11:57

Our people have one bad tendancy.. Everybody concentrate at the flourishing field & make no demand for that. If commercial building is profi, every body start constructing same building & so many buildings are vacant. As it is we are not getting civil engineers in the market. Govt should balance the act & specify minimium seats in each core branch, otherwise future will be problematic. We cannot produce civil engineers overnight, when the requirement arises.


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 11, 2025 11:56

சிவில் இன்ஜினியரிங் முடித்து ஐ.டி. கம்பேனியில் அநேகம் பேர் வேலை செய்கிறார்கள் நல்ல மார்க்ஸ் இருந்தால் நிச்சயம் வேலை உண்டு


Sathyan
ஜூன் 11, 2025 11:15

IT படித்தால் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே நல்ல சம்பளம் மற்றும் AC ரூமில் வேலை. சிவில் படித்தால் வெயில், மழை என்று பாராமல் நின்று சுற்றி உழைக்க வேண்டும் , அதோடுமில்லாமல் IT அளவிற்கு சிவில் வேலையில் ஆரம்ப சம்பளம் இருக்காது, இதுவெல்லாம் சிவில் படிப்பில் ஆர்வம் குறைந்துவருவதை காட்டுகிறது போலும்.


Loganathan Balakrishnan
ஜூன் 11, 2025 11:15

எப்போ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்ல சேரந்ததோ அப்பவே தொழிற் கல்வி என்பது உருப்படாம போய்டுச்சு


K.Sankaranarayanan, Erode
ஜூன் 11, 2025 10:14

there is a bad opinion about civil in poor peoples minds. govts are unwilling to change that mindset. as for as myself is concerned, it is best dept in engineering


சின்ன சேலம் சிங்காரம்
ஜூன் 11, 2025 10:03

கட்டட கட்டுமான தொழிலுக்கு பூமியில் என்றைக்கும் மதிப்பு இருக்கும். ஐடி எல்லாம் காற்று அடித்தால் கோபுரத்துக்கு பறக்கும் குப்பை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை