உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 2 தேர்வில் முறைகேடு விசாரணை துவக்கம்

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு விசாரணை துவக்கம்

சென்னை:சமீபத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில், வேதியியல் பாடத்தில், 3,181 மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். அதில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு பள்ளி மையத்தில், வேதியியல் பாடத் தேர்வு எழுதிய மாணவர்களில், 167 பேர் 'சென்டம்' பெற்றுள்ளனர்; மீதமுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர், 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதில் முறைகேடு நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, இதில் தொடர்புடைய மேல்நிலைப் பள்ளியில் தேர்வு பணி செய்த அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், வினாத்தாள் கட்டு காப்பாளர் உள்ளிட்டோரை, பள்ளிக் கல்வி துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை