உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுநீரகம் போல நாமக்கலில் கல்லீரல் முறைகேடு; ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை

சிறுநீரகம் போல நாமக்கலில் கல்லீரல் முறைகேடு; ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை

சென்னை: நாமக்கலில் நடந்த சிறுநீரக முறைகேட்டை தொடர்ந்து, கல்லீரல் திருட்டும் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ்., வினித் தலைமையில் மீண்டும் விசாரணையை துவங்க மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள் தானம் கோரி, ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை அ டிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது. அதே நேரம் உயிருடன் இருப்போர், ரத்த உறவுகளுக்குள் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாக அளித்து கொள்கின்றனர். ரத்த உறவுகள் அல்லாதவர்கள் அளிப்பது குற்றமாக உள்ளது. இந்நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள மக்களை பயன்படு த்தி, இடைத்தரகர்கள் சில லட்சம் ரூபாய்க்கு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு ப குதியை பெற்று, அவற்றை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, ரத்த உறவுகள் போல போலி ஆவணங்களை தயாரித்து இருப்பது உறுதி செ ய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு காரணமாக இருந்த திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை தாண்டி, வேறு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அதே மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடு நடந்ததாக, பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், அலமேடு பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண், கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் தனியாக வசிக்கிறார். அவருக்கு சில லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்த கடனை அடைக்க புரோக்கர்கள் வாயிலாக, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 8.30 லட்சம் ரூபாய் பேரம் பேசி, கல்லீரலில் ஒரு பகுதியை விற்பனை செய்துள்ளார். சிறுநீரக அறுவை சிகிச்சை முறைகேட்டை தொடர்ந்து, கல்லீரல் முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்திருப்பது, மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தையும் விசாரிக்க, ஏற்கனவே அம்மாவட்டத்தில் சிறுநீரகம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், தமிழக சுகாதார திட்ட இயக்குநருமான வினித் தலைமையில் குழு அமைத்து, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

கல்லீரல் முறைகேடு தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி, யார் காரணம் என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

theruvasagan
ஆக 19, 2025 17:34

திருட்டு என்கிற வார்த்தை இழிவாக இருப்பதால் இனிமேல் முறைகேடு என்று அழைக்கப்படவேண்டும். அதேபோல திருடன் களவாணி என்று சொல்லுவதற்கு பதிலாக அவர்கள் மனம் புண்படாதபடி முறைகேடர் களவாணர் என்று மரியாதையோடு அழைக்க வேண்டும்.


S.V.Srinivasan
ஆக 19, 2025 08:18

என்ன போறபோக்க பார்த்த உங்க ஆட்சியில் உடம்புல இருக்கிற பார்டெல்லாம் எடுத்து வித்துடுவாங்க போலிருக்கே. என்னவோ போடா மாதவா.


Barakat Ali
ஆக 19, 2025 07:41

சார் படா கில்லாடி யா இருப்பார் போல..


S.V.Srinivasan
ஆக 19, 2025 08:21

சார் படா படா கில்லாடி. முதல்ல கிட்னி, இப்போ நுரைஈரல் . இன்னும் இருக்கிற 8 மாசத்துல ஒவ்வொரு உறுப்பா கழட்டி வித்து காசாக்கிடுவாங்க.


ஆக 19, 2025 07:31

சிறுநீரகம் போல நாமக்கலில் கல்லீரல் முறைகேடு... ஏன் மற்ற உறுப்புக்களை விட்டு வைக்கிறீர்கள் ..முழுவதுமாக மனித உடலை ஆட்டையை போடவேண்டியதுதானே ... எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாதபடி ரத்தம் , தோல் , இதயம், எலும்பு மஜ்ஜைகள் ...போற்றவற்றில் முறைகேடுகள் சிறப்பாக தொடரட்டும் ...


Thravisham
ஆக 19, 2025 06:44

சாருக்கும் கோபம் வந்துடுச்சா?


Modisha
ஆக 19, 2025 04:31

எல்லா முறைகேடுகளும் நடந்துகொண்டு தான் இருக்கிறது . அரசு சால்ஜாப்பு சொல்லுகிறது .


Kasimani Baskaran
ஆக 19, 2025 04:02

திராவிடத்திருடர்கள் ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனையும் கூட கடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு ஓட்டுப்போடும் உபன்பிறப்புக்களுக்கு கை கால் போன்ற உறுப்புக்களை முறைகேடு செய்தால் ஒருவேளை புத்தி வருமோ இல்லையோ...


Mani . V
ஆக 19, 2025 03:56

சப்பாஸ், இதுவும் திருட்டு இல்லை, முறைகேடுதான். கொள்ளையர்களின் ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கணுமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை