உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., தரப்பில் அழைப்பு: பன்னீர்செல்வம் நிராகரிப்பு

பா.ஜ., தரப்பில் அழைப்பு: பன்னீர்செல்வம் நிராகரிப்பு

சென்னை: பா.ஜ., அழைப்பை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்காதது, பா.ஜ., நிர்வாகிகள் இடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைந்த பின், பா.ஜ., தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் திகழ்ந்தார். அ.தி.மு.க.,வில் இருந்து பழனிசாமி, அவரை நீக்கிய பின்பும், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய, பா.ஜ., உதவும் என நம்பினார். கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிந்தபோதும், பா.ஜ., கூட்டணியில் இணைந்து, பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட்டார். தேர்தல் தோல்விக்கு பிறகு, நிலைமை மாறியது. பழனிசாமி மீண்டும் பா.ஜ., கூட்டணிக்கு வந்தார். அதன்பின் பழனிசாமி பேச்சைக் கேட்டு, பா.ஜ., தலைமை பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவத்தை குறைத்தது. கடந்த மாதம் பிரதமர் தமிழகம் வந்தபோது, அவரை சந்திக்க பன்னீர்செல்வம் அனுமதி கோரினார். பா.ஜ., கண்டு கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து, அவர் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது, பா.ஜ., கூட்டணியில் இணைய விரும்பிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பா.ஜ.,வை நம்பினால் சிக்கல்தான் என அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. 'பன்னீர்செல்வம் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது, அக்கூட்டணிக்கு, தென் மாவட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என, அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து, பா.ஜ., மீண்டும் பன்னீர்செல்வத்திடம் பேச்சு நடத்த விரும்பியது. பா.ஜ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி முகாம், நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்றார். அவர் பன்னீர்செல்வத்தை சந்திக்க விரும்பினார். இத்தகவல், அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், 'எனது அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே, எதையும் தெரிவிக்க முடியும்' எனக் கூறி, சந்திப்பை தவிர்த்து விட்டார் பன்னீர்செல்வம். இது பா.ஜ., நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதும், அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தி, கூட்டணிக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

venugopal s
ஆக 11, 2025 17:35

பாவம் பாஜக,இந்த பிள்ளைப்பூச்சி பன்னீர்செல்வம் கூட பாஜகவை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் என்கிறதே!


Sun
ஆக 11, 2025 14:16

ஓ.பி.எஸ்சும் மூன்று , நான்கு ஆண்டுகளாக கதை விட்டுக் கொண்டு இருக்கிறார். பா.ஜ.க எப்படியும் எடப்பாடியிடம் பேசி தன்னை அ.தி.மு.கவில் சேர்த்து விடும் எனப் பார்த்தார். நடக்கவில்லை.தனிக் கட்சி ,கொடிக்கெல்லாம் கையில் உள்ள காசை எடுக்க வேண்டும். எடுக்க மாட்டார். அப்பாவும், மகனும் திமுகவில் இணையத்தான் சென்றார்கள் அன்வர்ராஜா போல.ஸ்டாலின் நேரடியாக தி.மு.கவில் இப்ப சேர வேண்டாம். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை பலவீனப் படுத்த நான் சொல்வதைக் கேளுங்கள் என அவர்கள் கொடுத்த ஐடியா, மற்றும் நிதிப் படி தி.மு.கவின் ஊதுகுழலாக இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனால இனிமேல் ஸ்டாலின் உத்தரவுப்படிதான் நடப்பார்.பா.ஜ.க கூப்பிட்டாலும் செல்ல மாட்டார்.


திகழ்ஓவியன்
ஆக 11, 2025 13:41

அப்படியே ஸ்டெடி யா இருங்கள், சாது மிரண்டால் காடு கொள்ளாது புரியட்டும் அவர்களுக்கு, இல்லை சீமான் போல வெயிட் ஆஹ் கறந்து கொள்ளுங்கள் PMCARE எலெக்டரால் பாண்ட் என்று அடிசிச்சி வெச்சிருக்கான்கள்


Prabu
ஆக 11, 2025 13:01

தர்மயுத்தம் என சீன் போட்டார். பின் யாரை எதிர்த்து ட்ராமா செய்தாரோ அவர்களிடமே சரண்டர் ஆகி விட்டார். இவர் போன்ற ஈன பிறவிகளால் தான் அதிமுக தேர்தலில் தோற்றது. சசிகலா இந்த மண்புழு தீயமுகவிடம் தொடர்பில் உள்ளதாக சொன்னார் அதை இப்பொது நிரூபித்துள்ளார்.


P. SRINIVASAN
ஆக 11, 2025 12:40

மீண்டும் துரோகிகளிடம் பொய் சேரவேண்டாம் என்பது எனது அறிவுரை.


Ramesh Sargam
ஆக 11, 2025 12:13

பன்னீருக்கும் சூடு, சொரணை எல்லாம் இருக்குப்பா...


Kadaparai Mani
ஆக 11, 2025 12:12

தமிழ் நாட்டில் நான்கு பேர் பெட்டி எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் .அதில் ஒருவர் பன்னீர் செல்வம்


M Ramachandran
ஆக 11, 2025 11:52

பேசாமல் தினகரனுடன் இருக்கும் ஒன்னு ரெண்டு முக்கிஸ்தர்களுடன் சேர்ந்து விடுவது மேல். பழனி தானும் உற்புடாது யிருக்கிறவனைய உறுப்புட விடாது. ஸ்டாலினுடன் அண்டர் டீலிங் வைத்துள்ள பழனியின் சகாப்தம் இந்த தேர்தலுடன் முற்றும். கட்சியினர் ஸ்டாலினின் காலில் விழுந்து சரணாகதியாகி விடுவார். வட்டம் சிறு வட்டம் குறு வட்டம் சதுராந்தகம் இது மாதிரி போஸ்ட் கிடைக்கும். பழனிக்கு பனி கொடையாக பண முடிப்பு கொடுத்து எடப்பாடிக்கு அனுப்பி வைக்க படும்


அரவழகன்
ஆக 11, 2025 11:51

மிஸ்டர் பன்னீர் தர்ம யுத்தம் மல்யுத்தம் ஆயுத யுத்தம் பண்ணினாலும் ....எடப்பாடி மன்னித்தாலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தொண்டர்கள் மன்னிக்க போவதில்லை ஆக இரட்டை எடப்பாடிக்கு சொந்தம்..


ديفيد رافائيل
ஆக 11, 2025 11:41

சுயேச்சையாக நின்று ஜெயிக்க முடியலேன்னா என்ன அர்த்தம். ஓ. பன்னீர்செல்வம் க்கு மக்கள் support இல்லை.