உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ''அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டி உள்ளார்.இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது. முதல் எதிரியாக டிரம்புக்கு ஈரான் இலக்கு நிர்ணயித்துள்ளது. அவர் ஒரு நல்ல தலைவர். மற்றவர்கள் அவர்களுடன் பேரம் பேச முயற்சிப்பதை அவர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஈரானின் அணு சக்தி நடவடிக்கைக்கு இஸ்ரேலின் தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. ஈரானால் நாங்கள் உடனடி அச்சுறுத்தை எதிர்கொண்டோம். ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்தையும் செய்ய தனது நாடு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, ஈரான் நாட்டின் ஆட்சியாளரும் மதத் தலைவருமான கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததை டிரம்ப் தடுத்து நிறுத்தினார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான்- இஸ்ரேல் இடையே சண்டை நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Abdul Rahim
ஜூன் 18, 2025 11:09

பெரிய ராசு மற்றும் ஆனந்த்/// 1947 இல் இருந்தே எங்களை விரட்ட எண்ணித்தான் இந்தியாவை ஜின்னாவை தூண்டிவிட்டு பிரிச்சிங்க ஆனா அது முடியாது நாடு பிரிஞ்சு இருக்கலாம் பிரிஞ்சு போனவன் போகட்டும் ஆனா நாங்க பிரிய மாட்டோம் ஒருநாளும் இது ஒரு சார்பு மத நாடாகாது அதனால் சும்மா சும்மா அங்க போ இங்க போ னு உளரும் வேலைய விடுத்து நீங்கவேனா நீங்க ஆதரிக்கும் நாடுகளுக்குஅமெரிக்க -இஸ்ரேல் மூட்டை முடிச்ச கட்டுங்க.


K.Uthirapathi
ஜூன் 17, 2025 12:06

திரு அப்துல் ரஹீம் அவர்கள் ஒன்றை நினைவில் கொண்டு கருத்து பதிவிட வேண்டும் என்பது என் வேண்டுகோள் முதலில் இஸ்ரேலின், சுமார் 1200 அப்பாவி பொது மக்களைக் கொன்று, நுற்றுக் கணக்கான வர்களை பிணைய கைதிகளாக கொண்டு சென்றது "ஹமாஸ்". ஹமாஸைத்தான் இஸ்ரேல் தாக்கியது. ஹமாஸுக்கு ஆதரவாக, ஈரான் இஸ்ரேலை தாக்கியதன் விளைவை தற்போது ஈரான் அறுவடை செய்து கெண்டிருக்கிறது. ஆன்மாக்கள் என்று பார்த்தால்,காசா-இஸ்ரேல் இரண்டு பக்கமும் ஆன்மாக்கள் உண்டு. முதலில் "தப்பு செய்தது ஹமாஸ்" என்பதை மறுக்க முடியாது.


Abdul Rahim
ஜூன் 18, 2025 11:02

அய்யா நீங்க உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், ஹிட்லரின் 3 லட்சம் யூத மக்களின் படுகொலைக்கு பிறகு பயந்து பாலசுதீனத்தில் தஞ்சமடைந்த யூதர்களுக்கு தங்க இடம் கொடுத்த மக்களையே கொன்று குவித்து அவர்களின் மண்ணை பறித்து அகதிகளாக்கியது யாரோ, அன்று ஹமாஸ் இருக்கவில்லையே உலக அரசுகள் மற்றும் அருகில் இருக்கும் அரபு தேசங்களும் கைவிட்ட நிலையில் தங்கள் மண்ணை காக்க வேறு என்ன வழி அய்யா, பாதிக்கப்பட்டவனுக்குத்தான் இழந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும் மத கண்ணோட்டத்தோடு இதை பார்க்காமல் தயவுசெய்து இடம் கொடுத்தவன் மற்றும் அந்த இடத்தையே பிடுங்கிக்கொண்டு கொடுத்தவனை அகதியாக்கியவன் என்ற ரீதியில் சிந்தியுங்கள் உங்களுக்கு உண்மை புரியும், நீங்க 1200 ஐ சொல்கிறீர்கள் ஆனால் அதற்க்கு முன்பும் தற்போதும் இஸ்ரேல் கொன்ற அப்பாவி மக்களின் கணக்கை உங்களால் சொல்ல முடியாது ஏனென்றால் அது கணக்கில் அடங்காது.இன்னொரு நாட்டில் இருக்கும் ஒரு இனம்இலங்கை -தமிழர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடினால் அதை போராட்டம் என்றும் தியாகிகள் என்றும் கொண்டாடிய நம்மவர்கள் இருந்த தன் மண்ணை பறித்தவனை எதிர்ப்பவனை மட்டும் தீவிரவாதிகள் என்கிறீர்கள்உங்களுக்கு வேறுபாடு இதுதான் அது இனம் இது மதம், மதம்தான் உங்களை இப்படி பேச வைக்கிறது


என்றும் இந்தியன்
ஜூன் 16, 2025 17:00

டப்பா விட அளவேயில்லையா??? trumpai கொல்ல??? இன்னைக்கோ நாளைக்கோன்னு டிரம்ப் இருக்கும்போது இதெல்லாம் அனாவசியம்


Abdul Rahim
ஜூன் 16, 2025 12:44

ஈரானிய உயர்தலைவரை கொல்ல ஏற்பாடு செய்துவிட்டு கோழைபோல கோர்த்துவிடும் வேலையை செய்கிறது கோழை குள்ளநரி இதுவும் தவளைவாயனின் ஏற்பாடுதான், எங்களுக்கு இதில் தொடர்பு இல்லை என உலகிற்கு ஒரு ஒப்பாரி வைத்துவிட்டு இதில் நேரடியாக தலையிட மேல்நாட்டு தவளை செய்யும் நரித்தந்திரம் இது.


Abdul Rahim
ஜூன் 16, 2025 12:37

யாருடைய பாவம் யாரை கொல்ல போகிறது னு பொறுத்திருந்து பார்ப்போம்


Abdul Rahim
ஜூன் 16, 2025 12:34

புளுகுவதற்கு ஒரு அளவு வேண்டாமா


தஞ்சை மன்னர்
ஜூன் 16, 2025 12:02

பிரிட்டன் செய்த தவறு மீண்டும் அது உனக்கு உதவாது என்பது மட்டும் உண்மை


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 16, 2025 10:58

கோர்த்து உடுறது என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ....


Thirumal s S
ஜூன் 16, 2025 10:36

நேதன்யகு மோதி டர்ம்ப் ஒன்றே


அப்பாவி
ஜூன் 16, 2025 10:25

இரானின் தலைமை ஜெனரலை ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்ல ஆணையிட்டவர் ட்ரம்ப். அது ஒரு political assassination. நெதன் யாஹுவுக்கு மறந்துபோச்சா?


சமீபத்திய செய்தி