உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரமணி வழக்கில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை; இபிஎஸ் வலியுறுத்தல்

வீரமணி வழக்கில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை; இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வீரமணி வழக்கில் தொடர்புடைய யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை; ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.இதுபோன்ற உணர்வுபூர்வமான, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, போலீசார் இந்த வழக்கை எந்தவித அழுத்தமும் இன்றி கையாள வேண்டும். தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் போலீசார் விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன.பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது.இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Haja Kuthubdeen
செப் 25, 2026 09:09

எதிர்கட்சி தலைவராக இருந்த உங்களுக்கு வீரமணி பற்றிய எந்த தகவலுமே தெரியாதா??????இது எவ்வளவு பெரிய விசயம்.இதையேன் நீங்கள் கவணிக்கவே இல்லை.நானும் கட்சிகாரன்தான்.குற்றம் குற்றமே...


bharathi
செப் 25, 2026 08:01

intelligence didn't work during his term ?


Vasan
செப் 25, 2026 15:02

Yes, Artificial Intelligence was not that much popular 5 years ago.


V Venkatachalam, Chennai-87
செப் 24, 2026 22:54

ஈ பி எஸ் அவர்களே வாழ்த்துக்கள். ஒரு வழியா வாயை தொறந்துட்டீங்க. சௌம்யா மாதிரி பேசாம இருந்துடுறீங்களோ ன்னு பயமா இருந்துச்சு.


Ram
செப் 24, 2026 19:58

த வெ க மட்டும் ஆட்சிக்கு வரவில்லையென்றால் party fund, school fund, டாஸ்மாக் ஊழல், வீரமணி வழக்கு என எதுவும் வெளியே வராமல் பங்காளிகள் கை கோர்த்து எல்லாவற்றையும் செய்து கொண்டு இருப்பார்கள். மக்கள் என்றும் முட்டாளாக இருந்து இருப்பர்கள். tvk ஒன்னும் செய்ய வில்லை என்றாலும் பரவாயில்லை..


Palanisamy T
செப் 24, 2026 21:26

மிகவும் சரியாக சொல்லியுள்ளீர்கள். இவ்வளவுக் காலமாக திமுக அதிமுக ஆட்சி செய்தார்கள். அப்போதெல்லாம் இந்த அசிங்கள் எல்லாம் தொடர்ந்து அரங்கேரிக் கொண்டுதான் இருந்தது. இவர்கள் அப்போது என்ன செய்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றும் செய்யவில்லை அந்த லட்சணத்தில் இவர்களின் ஆட்சி.


பல்லவி
செப் 24, 2026 19:50

தூத்துக்குடி ஸ்டெர்லைட் 13 பேரை சுட்டுக் கொன்று தொலைக்காட்சி பார்த்து தெரிந்தது என்று பொய் சொல்லி இருக்கிறார்கள் இந்த செய்தி யுடன் கொடநாடு செய்தியை பரப்பி வருகிறார்கள் நலம் பெற வாழ்த்துக்கள்


M Ramachandran
செப் 24, 2026 19:20

அண்னே ஜாக்கிரதை கொடை கொலை கேசு தலையிக்கு மேல் கத்தியா தொங்குது. ஜாக்கிரதை எப்போ அது விஸ்வரூபம் எடுக்குதோ. ரொம்ப துள்னா அது ஞ்யாபகத்திற்கு வந்துட போவுது. பார்த்து சூத்திரமா அடைந்து கிறது நல்லது. ஆஅ தீ மு க்கா உங்க்க திவாலா தண்ணி குடிக்குது. சுத்தமா துடைச்சிடாதீங்க்ககண்ணெ.


M Ramachandran
செப் 24, 2026 19:15

கண்ணு ஜாக்கிரதையா வார்த்தையை உடு. உன் பேரும் லிஸ்டிலு வருது


Santhakumar Srinivasalu
செப் 24, 2026 18:19

அதே மாதிரி கொடநாடு வழக்கிலும் யாராக இருந்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!


S Nagarajan
செப் 24, 2026 18:18

இன்றுதான் தங்களுடைய மேலிடத்திலிருந்து அறிக்கைவிட அனுமதி கிடைத்ததா?


பேசும் தமிழன்
செப் 24, 2026 18:11

ஆமாம்... இத்தனை நாட்களாக வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு.... இப்போது வாயை திறப்பது ஏன்.... அதன் மர்மம் என்னn?